அவர் அந்த வழியாக கடந்து போக வேண்டியதாயிருந்தது HE WAS TO PASS THAT WAY டாகோமா, வாஷிங்டன், அமெரிக்கா 57-07-27 வில்லியம் மரியன் பிரன்ஹாம் அவர் அந்த வழியாக கடந்து போக வேண்டியதாயிருந்தது HE WAS TO PASS THAT WAY டாகோமா, வாஷிங்டன், அமெரிக்கா 57-07-27 நன்றி சகோதரன் கார்ல்சன் அவர்களே. பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு கூறினார், "இது அதுதான்." இது அதுவல்லவென்றால், அது வரும் வரைக்கும் இதனுடன் இருக்கவே விரும்புகிறேன். இது அற்புதமாக உள்ளது. இதுபோன்ற ஒன்றை கிறிஸ்தவ வர்த்தகப் புருஷர்களால் (Christian Business Man] ஏற்படுத்தக்கூடும் என்று யாராவது எப்பொழுதாவது நினைத்துப் பார்த்ததுண்டா; இதற்கு தேவனுடைய கிருபை தேவையாய் இருக்கிறது. ஸ்தோத்தரிக்கப்பட்ட நம்முடைய தேவன் தம் ஜனங்களுக்கு செய்த மகத்தான காரியங்களையும், சாட்சிகளையும் நான் கேட்டுக் கொண்டிருந்தபோது, அந்த நாள் எவ்வளவு மகத்தான நாளாக இருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன். இங்கிருக்கும் என் நல்ல சகோதரன் வெஸ்டனிடம் நான் கூறினேன்... ஒவ்வொரு மத்தியான வேளையிலும் அவர் பேசும்போது, அதைக் கேட்பது நமக்கு மிகுந்த நன்மையாக இருக்கும். நிச்சயமாக, அவர் ஒரு அற்புதமான வேத போதகர் ஆவார். நான் இங்கு இந்த மேஜைகளைப் பார்க்கும் போதும், அதில் இளவயதினரும் முதியவர்களும் ஒன்றாக அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போதும் எனக்கு ஒரு நிச்சயிக்கப்பட்ட ஆசீர்வாதம் உண்டு, அது என்னவென்றால், நான் உங்களுடன் மீண்டும் உணவு அருந்துவேன் என்று நான் கூறினேன். அது ஒரு காலை நேர உணவல்ல; எல்லாம் முடிந்தபின்பு இருக்கும் இராவிருந்தாகும். அவ்வேளையில் நாம் எந்தவிதமான மனநிலையில் இருப்போம் என்று எண்ணி வியக்கிறேன். ஒரு சிறிய தொடுதலும், தெய்வீக மகிமையின் சிறு அச்சாரமே இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்துமானால், அவருடைய முழுமையான அபிஷேகத்தின் கீழ் நாம் இருப்பது என்னவாயிருக்கும்? 2. மேகத்தில் பிரம்மாண்ட மேஜைகள் அமைக்கப் பட்டு, மகிமையின் இராஜா வெளியே வந்து அந்த நீண்ட மேஜையைப் பார்ப்பதும், நாம் அந்த நீண்ட மேஜையில் அமர்ந்து ஒருவர் மற்றொருவரின் கைகளைப் பிடித்த வண்ணம் இருக்கையில் "டாகோமாவின் [Tacoma] அந்தக் காலை வேளை ஞாபகமிருக்கிறதா?" என்று கேட்பதும், எப்படியிருக்கும் என்று நான் அவ்வப்போது நினைத்து வியக்கிறேன். நரைத்த தலைமுடியுடன் இங்கு அமர்ந்திருக்கும் சில மூத்த அனுபவசாலிகள்தான் எனக்கான இந்தப் பாதையை வகுத்துத் தந்துள்ளனர். இந்தக் காலை வேளையில் அவ்விதமான நபர்களுக்கு முன்பாக நின்று அவர்களுடன் பேச முயற்சிப்பதை எனக்கான கௌரவ மாகவும் சிறப்புரிமையாகவும் எண்ணுகிறேன். அநேகப் புருஷர்களாகிய நீங்கள் போர்க்களத்தில் நின்று பிரசங்கித்துக் கொண்டும், பாதைகளை வகுத்துக் கொண்டும் இருந்த அந்த வேளையில் நான் ஒரு சாதாரண பாவச்சிறுவனாக இருந்தேன். இப்பொழுது இங்கு நிற்பதை நான் கௌரவமாக எண்ணுகிறேன். மேலும் நான்... அதுவல்ல... இதில் நான் செய்யக் கூடியது மிகவும் குறைவானதாகும்; ஏதாவது கௌரவம் இதன் மூலம் கிடைக்குமானால் அவை உங்களுக்கே உரிய தாகும். நீங்கள் தெருமூலைகளில் தம்புரு (Tambourine- தாள வாத்தியம்) மற்றும் கிட்டாருடன் நின்று பாதையை உருவாக்கினீர்கள். நீங்கள் வரும் என்று சொல்லியப் பாதையில் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். தேவனுடைய கிருபை நம் அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கே நாம் துதி மற்றும் மகிமையைச் செலுத்து கிறோம். 3. இந்தக் கிறிஸ்தவ வர்த்தகப் புருஷர்களின் ஐக்கியம் எனக்கு முக்கியமானதாக இருந்தது. நான் மிஷனரி பாப்டிஸ்டு சபையில், டெக்சாஸிலுள்ள (Big Springs) பிக் ஸ்ப்ரிங்-ஐ சேர்ந்த டாக்டர். ராய் இ.டேவிஸ் என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டேன். அது முதற்கொண்டு நான் ஒரு பாப்டிஸ்டாக இருந்தேன். பாப்டிஸ்டு சபையைக்குறித்து நீங்கள் அறிவீர்கள். உங்கள் உபதேசத்தினிமித்தம் நீங்கள் பாப்டிஸ்டு சபையைவிட்டு வெளியேற்றப்படமாட்டீர்கள், ஏனென்றால், அவர்களுக்கென்று ஒரு உபதேசமும் இல்லை; அது ஒரு ஐக்கிய மாகும். அது பாப்டிஸ்டு எனும் ஐக்கியமாகும். ஒவ்வொரு சபையும் தனக்குத்தானே ஒரு முழு சுதந்திரம் [அதிகாரம்] உடையதாயிருக்கிறது. நீங்கள் பாப்டிஸ்டு சபையை விட்டு எதற்காக வெளியேற்றப்படுவீர்கள் என்றால் ஒழுக்கக் கேடான வாழ்க்கைக்காக மட்டுமே. அனைத்து ஸ்தாபனங்களிலிருந்தும் நான் விடுதலை யாகி, கிறிஸ்துவின் சரீரத்திற்கு உபதேசிக்க வேண்டும் என்பதற்காக நான் பாப்டிஸ்டு சபையைவிட்டு வெளியேறினேன். இந்தக் காலைப்பொழுதில் நான் ஒரு அமைப்பைச் சார்ந்தவனாக இருக்கிறேன். பிரஸ்பிட்டேரியன் துவங்கி அதைச் சுற்றியுள்ள பல்வேறு ஸ்தாபனங்களின் மக்கள் எனக்கு அனுப்பிய பல கௌரவச் சான்றுகளை (Honorary Credentials] நான் என் வீட்டில் வைத்துள்ளேன். ஆனால், அதிகாரப்பூர்வமாக நான் ஒரு அமைப்பைச் சார்ந்துள்ளேன்; அதுதான் கிறிஸ்தவ வர்த்தக அமைப்பாகும். நான் அவர்களின் அடையாள அட்டையை என் பாக்கெட்டில் வைத்துள்ளேன். நான் இந்த சிறப்பான அமைப்பினருடன் இணைந்திருக்கிறேன் என்று சொல்வதற்கு பெருமைப்படுகிறேன். ஏனென்றால் இது ஒரு ஸ்தாபனங்களுக்கு அப்பாற்பட்ட அமைப் பாகும். அற்புதமான புருஷர்கள் கூட்டத்தை நான் அங்கு கண்டேன். சாதாரண மனிதர்களாக இருந்தாலும், தங்கள் திராணிக்கு ஏற்ப, இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதற்கான எல்லாவற்றையும் செய்ய முயற்சிக் கின்றனர். நான் எனக்குரியவைகளுடன், இவர்களுக்குப் பின் இருப்பதில் நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறேன். 4. இந்த விதமான ஊழியக்களத்திற்கு முதன்முதல் வந்தபொழுது, நான் பெந்தெகொஸ்தேயினரை குறித்துக் கேள்விப்பட்டதே இல்லை. ஓ, நான் அவர்களைக் பரிசுத்த உருளைகள் மற்றும் இன்ன மற்றும் பிறவிதமாக தான் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் நான் அவர்களைக் கண்டபோது, அவர்கள் ஒரு மிகவும் இனிமையான மக்கள், தங்களால் இயன்றமட்டும் இலகுவாக இருக்கக் கூடியவர்கள், அன்பானவர்கள், நல்ல மனம் மற்றும் குணத்தைக் கொண்டவர்கள். ஆனால், நான் பாப்டிஸ்டுகள் மற்றும் இதர மக்களிடம் பார்த்தது போலவே, இங்கும் இவர்களுக்கிடையே வேறுபாடுகளைக் கண்டேன். நான் சர்ச் ஆப் காட் (Church of God] போன்ற ஏதாவது அமைப்பினரின் பக்கம் சார்ந்து இருந்திருக்கலாம். ஆனால் நான் தனியாக சுதந்திரமாக இருந்துவிட்டேன். அப்பொழுதுதான் நான் அந்த பிளவில் [Breach] நின்று, "நாம் அனைவரும் சகோதரர்கள்; நாம் அனைவரும் ஒன்றுகூடுவோம் என்று சொல்லமுடியும். யாக்கோபு (அது ஈசாக்கு ஆதி: 26 -தமிழாக்கியோன்) மூன்று கிணறுகளைத் தோண்டினான், முதல் கிணற்றைத் தோண்டிய போது பெலிஸ்தர்கள் அவனை அதைவிட்டு துரத்தி விட்டனர்; அவன் அந்தத் துரவை [கிணற்றை] "தீமை (Malice)" என்று அழைத்திருப்பான் என்று விசுவாசிக்கிறேன். அவன் இரண்டாவது துரவை வெட்டினபோதும் அவர்கள் அவனை அங்கிருந்து துரத்தினர். எனவே, அவன் அதை "சச்சரவு [Strife]" என்று அழைத்தான். அவன் மூன்றாவது துரவை வெட்டினபோது, "இது நம் அனைவருக்கும் உரியது" என்று கூறினான். 5. ஒற்றைத்திமில் ஒட்டகத்தில், இரட்டைத் திமில் ஒட்டகத்தில் மற்றும் மூன்று திமில் ஒட்டகத்தில் சவாரி செய்பவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த நீரூற்றி லிருந்து பருகலாம், நாம் அனைவரும் பருகலாம் என்று நினைக்கிறேன்; நாம் ஒருமித்து பருகலாம். நான் இதற்காக மகிழ்ச்சியடைகிறேன். ஒருநாள் தேவன் நம் அனை வரையும், அனைத்து ஸ்தாபனங்களையும் சேர்ந்த தேவனுடைய பிள்ளைகளையும், மீட்கப்பட்ட மகத்தான சபையாக ஒன்று கூட்டுவார் என்பதை விசுவாசித்து, மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்குத் தெரியுமா, சாலமோன் தேவாலயத்தைக் கட்டின போது, அதற்கான கட்டுமானப் பொருட்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்ட மரங்களையும், லீபனோனில் உள்ள தேவதாரு விருட்சங்களையும் வெட்டி யோப்பா பட்டணம் வரை கடலில் மிதக்கச்செய்து கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து எருசலேம் வரை மாட்டு வண்டிகளில் கொண்டு வரப்பட்டன. மேலும், சிற்பாசாரிகள் பல்வேறு கற்களை பல ஆண்டுகளாக வெட்டி பலவிதங்களில் வடிவமைத்தார்கள். ஆனால், அவைகள் எல்லாவற்றையும் ஒன்றிணைத்திடும் போது அதில் ஒரு கல்கூட வித்தியாசமானதாக இல்லாமல் ஒவ்வொரு கல்லும் அதன் ஸ்தானத்தில் சரியாக பொருத்தப்பட்டது. தேவனும் தேவனும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் நம்மை மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிட்டேரியன் மற்றும் பெந்தெகொஸ்தே போன்ற அமைப்புகளிலிருந்து வெட்டி எடுத்துள்ளார். ஆனால், இயேசுவானவர் வரும்போது, நாம் அனைவரும் ஒவ்வொரு கற்களாய் சென்று தேவ அன்பு என்னும் சாந்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட கற்களாய் பொருத்தப்பட்டிருப்போம். தேவன் தன் சபையைக் கொண்டு செல்வார். 6. இப்பொழுது, இங்கு டாகோமாவில் (Tocoma) இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. டாகோமாவிற்கு என் மனதில் எப்பொழுதும் ஒரு இடம் உண்டு. ஏனென்று தெரியவில்லை, ஆனால் டாகோமா உண்மை யாகவே இதமான ஒரு இடமாகும். இந்த வடமேற்கு நாடு மிகவும் அழகாகவும், உங்கள் மரங்கள் மற்றும் உங்கள்... நிறைய தண்ணீர் உள்ளது. பீனிக்ஸில் உள்ள பாலைவனத்தில், சமீபத்தில் நான் பாலைவனத்திற்கு சென்றிருந்தேன். அங்குள்ள எதை நீங்கள் தொட்டாலும் அதிலிருந்து ஏதாவது நம்மீது ஒட்டிக்கொள்ளும். நீங்கள் எதையாவது தொட்டால், அது அப்படியே, சோம்பலாக அந்த இடத்தை விட்டு நகராமல், ஒட்டிக்கொள்ளக் கூடியதாகக் காணப்படும். ஆனால், அதே தாவரத்தை இங்கு கொண்டு வருவோமானால் அது இலையாக மாறும், ஏனென்றால் அதற்குத் தண்ணீர் கிடைக்கும். நம்முடைய சபைகளையும் நான் அவ்விதமாகவே எண்ணுகிறேன். பெரும்பாலான சபைகள் குளிர்ந்துபோய், முறைமைகளைச் சார்ந்தவையாகவும், அலட்சியமானவையாகவும் இருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால் அவைகள் ஆவிக்குரிய தண்ணீர் இல்லாதவைகளாய் இருக்கின்றன. அவைகளுக்கு தேவைப் படுவதெல்லாம், அவைகளை மென்மையாக்குவதற்கான சிறிது தண்ணீர் தான். அப்பொழுது அவை நிழல் தரும் அழகான இலைகளைப் பிறப்பிக்கும். நாம் சிறிது... தேவனிடத்தில் நிறைய தண்ணீர் உள்ளது. எனவே நீங்கள் சிக்கனமாக அதை குடிக்கவேண்டிய அவசியமில்லை. அவர் ஒரு வற்றாத ஜீவ ஊற்றாய் இருக்கிறார். 7. "சகோதரன் பிரன்ஹாம், நான், நான் தேவனிடம் என்னை குணமாக்கும்படிக் கேட்டேன், ஆனால் அவர் வேறு வேலையாய் இருக்கிறார்" என்று சொல்லக்கூடிய நபர்களை நான் கொண்டிருந்தேன் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா. என்னே, யோசித்துப் பாருங்கள். அட்லாண்டிக் சமுத்திரத்தின் மையத்தில் இருக்கும் இந்த அளவு நீளமுள்ள ஒரு சிறிய மீன், "நான் இந்த தண்ணீரை சிக்கனமாக குடிப்பது நல்லது, ஒருநாள் அது தீர்ந்துபோய்விடலாம்" என்று சொல்லியதாம். ஹா, ஹா... இதையே அறிவுப்பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால், உங்களுக்கான தேவனுடைய நன்மைகளை நீங்கள் ஒருபோதும் தீர்ந்துபோகச் செய்யமுடியாது. கற்பனைசெய்து பாருங்கள், எகிப்து தேசத்தின் பிரமாண்ட பண்டகசாலைக் [தானிய சேமிப்பு] கிடங்கின் கீழ் வசிக்கும் இந்த அளவு நீளமுள்ள சிறிய சுண்டெலி ஒன்று, "நான் ஒரு நாளைக்கு இரண்டு தானியங்களை மட்டுமே சாப்பிடுவது நல்லது; இல்லையெனில் குளிர் காலம் வரை அது இல்லாமல் தீர்ந்து போய்விடலாம்" என்று சொல்லியதாம். ஓ! என்னே, உங்களால் முடியாது... அவர், உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்கும் பொருட்டு, மிகுதியாய் நீங்கள் கேட்கவேண்டும் என்று விரும்புகிறார். தேவனிடத்தில் எதையும் கேட்பதற்குப் பயப்படாதீர்கள், அவர் உங்களுக்கு கொடுக்க விரும்புகிறார். நீங்கள் பெற்றுக்கொள்வதற்கு எவ்வளவாய் விரும்புகிறீர்களோ, அதைக்காட்டிலும் அதிகமாய் உங்களுக்கு அதைக் கொடுக்க தேவன் விரும்புகிறார். நமக்கு அதைச்செய்ய அவர் விருப்பமுள்ளவராய் இருக்கிறார் என்பதை நாம் அறிவதற்கு, அந்தச் சிறிய நிழலை நாம் துடைத்து விடவேண்டும். நீங்கள் அவரு டைய பிள்ளைகள்; அவர் உங்களை நேசிக்கிறார் மற்றும் அவர்... உங்களுக்குத் தெரியுமா, உங்கள் பிள்ளைகளை பராமரிக்கவும், அவர்களுக்கு நல்ல காரியங்களை செய்வதற்கு நீங்கள் எவ்வளவு விரும்புவீர்கள் என்று, எவ்வளவு அதிகமாய்... உங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோராகிய தந்தையின் ஸ்தானம் தேவனிடத்திலிருந்து வருகிறது... ஏனெனில் அவரே நம் அனைவருக்கும் தகப்பனாவார். அவர் - அவர் நம்மை நேசிக்கிறார், நமக்கு எதையும் செய்ய விரும்புகிறார். அவர் நம்மை அவருடைய ஆசீர்வாதங்கள் மற்றும் இன்ன பிறவற்றின் கீழ் சரியாக அமையச் செய்து விட்டால், அவர் நம்மீது நம்பிக்கை வைக்கமுடியும், பிறகு அங்கே... பரலோகம் நம் அனைவருக்கும் திறக்கப்பட்டிருக்கும் . 8. இப்பொழுது, இந்தக் காலையில் நான் அறிவேன், நான்... நீங்கள் நிறைய நல்லக் காரியங்களைப் பெற்றிருக்கிறீர்கள். நான்- நான் அறிவேன், உங்களை நீண்ட நேரம் இங்கே இருக்கவைக்க நாங்கள் விரும்பவில்லை; நான் அதிகம் பேசியதினால் சிறிது கரகரப்பாக இருக்கிறது. உங்கள் நேரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், இந்தக் காலை வேளையில், இந்த சிறிய பொருளின் கீழ் பேசவும் ஒரு நாடக வடிவில் கொண்டு செல்லவும் விரும்புகிறேன். மேலும், இதற்கு அதிகமாக குரலை உயர்த்திப் பேசவேண்டியிருக்காது. ஏனெனில், இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, அல்லது ஒரு வாரம் இந்த ஞாயிறு முதல் அடுத்த ஞாயிறு வரை, அதன்பின் நான் மற்றொரு பதினொரு நாள் கூட்டத்திற்குச் செல்லப்போகிறேன். நான் இந்தக் காலை வேளையில் வேதத்திலிருந்து தேவனுடைய வார்த்தையின் ஒரு பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். நாம் பரிசுத்த லூக்கா எழுதிய சுவிசேஷம், 19- ஆம் அதிகாரத்தில் இதை வாசிப்போம், அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில், ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன், இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக் கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல், அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்திமரத்தில் ஏறினான். கர்த்தருக்குச் சித்தமானால் நான் என்னுடைய குறிப்புகளை பயன்படுத்த விரும்புகிறேன்..?...இப்பொழுது சில நொடிகள் நீங்கள் என்னுடன் ஜெபியுங்கள். அதாவது, "அவர் அந்த வழியாக கடந்துபோக வேண்டியதாயிருந்தது" 9. அது ஒரு மோசமான இரவாக இருந்திருக்க வேண்டும்; அந்தச் சிறிய மனிதன் மிகவும் களைப்புற்று இருந்தான், அவன் அதைக்குறித்து குழப்பமுற்று இருந்தான்... அந்தவிதமான தூக்கமற்ற இரவுகளை நீங்கள் அறிவீர்கள்... அவனுடைய மனைவி ரெபேக்காள், "சகேயு உங்களுக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டாள். ஓ, அது ஒன்றுமில்லை, இன்று பட்டணத்தில் வியாபாரம் மிகவும் மோசமாக இருந்தது, ஒருவேளை அதனால் தான் இப்படியாக எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன்; என்னால் தூங்க முடியவில்லை" என்று கூறினான். ஆனால் உங்களுக்குத் தெரியுமா, ரெபேக்காள் அதைவிட, சரியான காரணத்தை அறிந்திருந்தாள். அவள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒரு விசுவாசியாக இருந்தாள்; பட்டணத்தில் தொழிலதிபராக இருக்கும் தன் புருஷனும் கர்த்தராகிய இயேசுவை பின்பற்றுபவராக மாறவேண்டும் என்று அவள் ஜெபித்துக்கொண்டிருந் தாள். உங்களுக்குத் தெரியுமா, திட நம்பிக்கை உங்களை அமைதியற்றவராக மாற்றிவிடுகிறது. அதைத்தான் அது செய்தது. மேலும், நல்ல ஜெபிக்கக்கூடிய மனைவி அல்லது தாய் சில சமயம், மேடையிலிருந்து ஒரு போதகர் செய்யக்கூடியதைக் காட்டிலும், அதிகமாய் தங்கள் வீடுகளில் முழங்கால்களில் நின்று தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு என்று அதிகமாய் செய்கிறவளாய் இருக்கிறாள். அது சரியே. 10. அவள் அவரைப் பின்பற்றுபவளாக இருந்தபடியினால், நசரேயனாகிய இயேசு நாளை பட்டிணத்திற்கு வரப்போவதை அவள் அறிந்திருந்தாள். அவள் அவரை நேசித்தாள். மற்ற மனிதர்களைவிட அவரை வித்தியாச மானவராக காண்பிக்கும் ஏதோ ஒன்றை அவரிடம் அவள் கண்டிருந்தாள். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தராகிய இயேசுவிடம் ஒருவரும் இதுவரை தொடர்பு கொண்டதில்லை, ஆனால் அவர் எல்லாரையும் விட வித்தியாசமானவர் என்பதை அறிந்திருந்தார்கள். ரோமர்கள் அவர் பேசுவதை கேட்க வந்திருந்து, திரும்பிப்போய் "எந்த மனிதனும் இதுவரை இப்படி பேசியதில்லை" என்று கூறினர். நீ இயேசுவை சந்திக்கும் போது அங்கு ஏதோ ஒன்று வித்தியாசமானதாக இருக்கிறது; அது உன் வாழ்க்கையை மாற்றுகிறது. அவள் சகேயுவை அழைத்துக்கொண்டுபோய், இயேசுவை சந்திக்கச் செய்துவிட்டால், அதுவே போது மானதாக இருக்கும் என்று எண்ணினாள். இந்த காலத்தில் இருக்கும் அநேகரைப்போல. அவர்களின் காலத்திலும், அவர்கள் இயேசுவைக் குறித்து அதிகமாக விமர்சனம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் விமர்சித்துக்கொண்டிருந்தனர். இயேசுவைக் குறித்து அவர்களிடம் பரவலாக இருந்த நம்பிக்கை என்னவென்றால், அவர் ஒரு மதவெறியர், ஆசாரியர்களின் கருத்துகளுக்கு முரண்பாடான கருத்துக்களைத் தெரிவிப்பவர், மற்றும் அவர்களுடைய மதத்தை சிதைக்க முயல்பவர் என்றும், ஆனால் அவர்களோ எல்லாம் சரியாக அமைந்திருக்கிறது. அவைகள் சிதைக்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. அது அவ்விதமாகவே இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், தேவனோ வேறுவிதமானத் திட்டங்களைக் கொண்டிருந்தார். 11. ஆகவே, சகேயுவை எப்படியும் தான் விரும்புகிறபடி பெற்றுக்கொள்வேன் என்பதை ரெபேக்காள் அறிந்திருந்தாள். ஏனெனில், அவன் ஒரு உத்தம இருதயத்தை உடையவன் என்பதை அவள் அறிவாள்... அவன் எரிகோவில் ஒரு தொழிலதிபராக இருந்தான், அவன் மிகப்பெரிய பணக்காரன். அதாவது அவனுக்கு ஒரு உணவகம் சொந்தமாக இருந்தது என்று வைத்துக் கொள்ளலாம். அவன் மிகப்பெரிய பணக்காரனாக இருந்தான்; ஆனால் பணக்காரன் ஆகவேண்டும் என்பதற்காக அவன் எந்த தவறையும் செய்யவில்லை. அவன் நேர்மையானவனாக இருந்தான். நீங்கள் எந்த விதமான தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், நேர்மையானவர்களாக இருப்பீர்களானால், தேவன் உங்களை உபயோகிக்க முடியும். ஒரு நேர்மையான இருதயம் எப்பொழுதும் உண்மைக்கு பதிலளிக்க கூடியதாய் இருக்கும். ஆகையால் ரெபேக்காள் இதை அறிந்திருந்தாள். இயேசு அந்த நகரத்திற்கு வருவேன் என்று வாக்களித்திருந்ததை அறிந்த ரெபேக்காள், சின்ன சகேயுவுக்காக அதிகமாக ஜெபித்துக் கொண்டிருந்தாள். நிச்சயமாக அது எப்பொழுதுமே அங்கே பலதரப்பட்ட மனிதர்களைக் கொண்டு வரும். அதில் சிலர் அவரை விமர்சிக்கலாம், சிலர் ஏளனம் செய்யலாம், வேறுசிலர் அவரை விசுவாசிக்கலாம். ஆனால் அவளோ, சகேயு இயேசுவை பார்த்தால் போதும் என்று இருந்தாள். ஆனால், உங்களுக்குத் தெரியுமா, ஆசாரியன் கூறினான், ரபீ கூறினான், "யாராகிலும் இந்த மனிதன் பேசுவதைக் கேட்பதற்காகப் போனால், அவர்களுக்கு ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கக்கூடிய காகிதம் வழங்கப்படும். அவர்கள் தங்கள் சமுதாயத்தை விட்டு விலக்கப்படுவார்கள். மேலும் அத்தகையச் செயல்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது" என்று கூறினான். அவர் இந்த நகரத்திற்கு வருவது ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்தவும், நம்முடைய சபைகளை உடைக்கவும், மற்றும் மக்களைத் தூண்டி விடவும் தான் வருகிறார். ஆகவே ஒருவரும் அவரைப் பார்க்கப் போகக்கூடாது என்றான். 12. சகேயு அந்த மகாசபையின் சாசன உறுப்பினராகவும், ஆத்ம சிநேகிதனாகவும் இருந்தான். அவன் அந்த ரபீயுடன் கோல்ஃப் [Golf] விளையாட்டை ஆடுவான். ஆனால் வெளியே அவ்வளவு எளிதாக வந்துவிட முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா. ஆனால் இந்த சூழ்நிலையை ஒரே ஒரு காரியத்தினால் தான் மாற்றமுடியும், அதுதான் ஜெபம். ஜெபம் காரியங்களை மாற்றுகிறது, நீங்கள் ஜெபிக்கும்போது, அது ஏதோவொன்றைச் செய்கிறது. அவனுக்கு அந்த இரவு ஏன் உறக்கமற்ற இரவாக இருந்தது என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். ரெபேக்காள் ஜெபித்துக் கொண்டிருந்தாள்; தேவன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார். சின்ன சகேயுவினால் ஓய்வெடுக்க முடியவில்லை. அவன் மிகவும் களைப்புற்று இருந்தான். இறுதியாக ரெபேக்காள் தன் பக்கமாக திரும்பி, கனிவுடன் "நன்றி தேவனே, அவர் ஓய்வெடுக்க முடியாமல் இருப்பதை... பார்க்கும்போது, நீர் அவருடன் இடைப்பட்டுக் கொண்டிருக்கிறீர் என்பதை அறிவேன்" என்றாள். [ஒலிநாடாவில் காலியிடம்- ஆசி] தொழிலதிபர்களே பார்த்தீர்களா... அவன் ஓய்வில்லாமல் இருக்கையில் நினைவில் கொள்ளுங்கள், தேவன் அவனுடன் இடைபட்டுக் கொண்டிருக்கிறார். ஆகவே அவர்கள்... அவள் திரும்பிப்பார்க்கிறாள்...[ஒலிநாடாவில் காலியிடம்- ஆசி] அவன் தன்னிடமுள்ள எல்லா ஆடைகளையும் போட்டுப் பார்க்கிறான். அவன் கண்ணாடியின் முன் நின்று தன் மயிரை சீர்படுத்தி கொண்டான். அவள், "சகேயு என்ன இவ்வளவு சீக்கிரம், இந்த அதிகாலை வேளையில் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டாள். [ஒலிநாடாவில் இரைச்சல்களால் தடை ஏற்பட்டுள்ளது- ஆசி.] "ஓ, என்னால் தூங்கமுடியவில்லை, இந்தக் காலையில் நான் என் வேலைக்குப் போவதற்கு முன்னதாக சிறிது வெளியே சென்று காற்று வாங்கலாம்" என்று நினைத்தேன். அவள், தேவன் அவனைக் காலையில் சீக்கிரமாகவே எழுப்பி, அவனுடன் இடைபட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்திருந்தாள். 13. ஆகையால் அவன் தன்னை முறையாக தயார்ப்படுத்திக் கொண்டான். பின்பு அவன் படிகளின் வழியாக கீழேச் சென்று, தெருவில் இறங்கி, தன் கைகளை பின்புறமாகக் கட்டியவாறு நின்று கொண்டிருப்பதை அவள் கவனித்துக்கொண்டிருந்தாள். அவன் அங்கு நின்று கொண்டிருந்தபோது, எதை சிந்தித்துக் கொண்டிருந்தான் என்பதைப் பார்ப்போம். அந்த கலிலேய தீர்க்கதரிசி இன்று தான் இந்த நகரத்திற்கு வரப்போகிறார்; அந்த நபரை நான் நன்றாகப் பார்க்க விரும்புகிறேன். நான் அவரைக்குறித்து நன்மையானதையும், தீமையானதையும் கேள்விப்பட்டேன். ஆனால், நான் அவரைப் பார்க்கும் போது, நான் அவரைக்குறித்து என்ன நினைக்கிறேன் என்பதை அவரிடம் சென்று அவருடைய முகத்திற்கு நேராக சொல்லிவிடுவேன். ஓ! ஆம் ஐயா, நான் அவரைச் சந்திக்கும் போது, அவரைக் குறித்துத் தாழ்வாக எண்ண வைத்து விடுவேன். அவர் தெற்கு வாசல் வழியாகத்தான் வருவார் என்று அறிவேன். எனவே நான் அந்த தெற்கு வாசலுக்குச் சென்று அங்கு காத்திருக்கப் போகிறேன். அவர் அந்த வழியாக வரும் போது, அவரைக்குறித்த என்னுடைய கருத்தை நான் தெரிவிப்பேன். நாம் அந்த வழியாக இதைச்செய்யலாம். அவன் கூறினான், "நான் அங்கே கீழே நின்று அந்த பரிசுத்த உருளையரான தீர்க்கதரிசி வரும்வரை காத்திருக்கப் போகிறேன்."அவருடைய தெய்வீக சுகமளித்தல் மற்றும் அவருடைய மற்ற எல்லாக் காரியங்களும் முட்டாள்தனமானது என்று அவருக்குத் தெரியப்படுத்தப் போகிறேன். எங்கள் ரபீ அவர்கள் மேல் நிலைப்பள்ளிக்கு சென்றிருக்கிறார், அதனால் அவர், தான் பேசுவது என்ன என்பதை அறிந்திருக்கிறார். நான் அவருக்கு அதைச் சொல்லுவேன். அவர் தன்னுடைய மனோதத்துவ ரீதியில் ஒரு கூட்ட படிப்பறியாதவர்களை வேண்டுமானால் வசீகரிக்கலாம். ஆனால் என்னைப் போன்ற படித்த ஒருவனிடம் அவரால் நிச்சயமாக பேசமுடியாது. நான் அதைக் குறித்தும் அவருக்குச் சொல்லப்போகிறேன். ஓ, தேவனே... [ஒலி நாடாவில் காலியிடம்- ஆசி.) 14. இன்றுக் காலையில் நான் இவ்வாறாக சிந்தித்துக் கொண்டிருந்தேன், நான் உணவகத்திற்கு சாப்பிடச் சென்றிருந்த போது, அங்கே ஒரு சில வாலிபர்கள் உள்ளே நுழைந்து அந்த பழைய பூக்ளி- வூக்ளி (bookly -Wookly) (ராக் அண்ட் ரோல் போன்ற ஒரு குழுவின் பாடல்) அல்லது அதுபோன்ற ஒன்றுக்கு ஒரு நிக்கல் (1நிக்கல்=5சென்ட்கள்) போட்டார்கள். அதை கேட்காதிருக்கும் வகையில் என காதுகளை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது, அப்படி செய்தால் மட்டுமே அங்கு சாப்பிட முடியும். ஆனால் இன்றுக் காலையில், நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கேட்ட, அந்த "யுத்தம் செய்வோம். வாரும், கிறிஸ்து வீரரே" என்ற இனிமையான பாடல் என் இதயத்தை மிகவும் சிலிர்ப்படையச் செய்தது. என் சாப்பாடு எனக்கு வித்தியாசமாக ருசித்தது. ஏனெனில், நாம் பரலோக சூழலில் இருந்தோம். எங்கே இயேசு இருக்கிறாரோ அங்கு எப்பொழுதுமே பரலோக சூழலை ஏற்படுத்தும். அவன் [சகேயு] அங்கு காத்துக்கொண்டிருந்தபோது, அவன் கூட்டத்திலே தள்ளிவிடப்பட்டுக் கொண்டு நின்றிருந்தான். அப்பொழுது அவன், "இன்னும் ஒரு நிமிடம் நான் இங்கே நின்றிருந்தால், நான் குள்ளனாக இருக்கிறபடியால் யாராகிலும் என்னைத் தள்ளிவிட்டு முன்பாகச் சென்று விடுவார்கள்" நான் திரும்ப வீட்டிற்கே போக வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டிருந் தான். ஆனால், உங்கள் இதயத்தில் இயேசுவைக் காண வேண்டும் என்று தீர்மானித்து இருந்தால், நீங்கள் ஒருபோதும் தோற்றுப் போவதில்லை. அது சரி. 15. அவன் தன் கைகளை பின்புறமாகக் கட்டிக் கொண்டு திரும்பிச் செல்வதற்காக நடக்க ஆரம்பித்த போது, ஏதோ ஒன்று அவனிடம், "இப்பொழுது நீ இங்கிருந்து போய்விடப் போகிறாயா?, நீ அவரிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்திருப்பதை சொல்லாமல் போய்விடப் போகிறாயா?" என்று சொன்னது. அவன் தன்னிடம், "இல்லை நான் தோற்றுப் போவதில்லை" என்று சொல்லி, அவரைக் காணும் வரை அங்கேயே தரித்திருக்க தீர்மானித்தான். அவரை அவன் பார்த்தபிறகு, அது சரியாக இருந்தாலும் அல்லது தவறாக இருந்தாலும், அவரிடம் அதைக் கேட்டப் பின்னரே திருப்தியாகிவிடுவான். மேலும் அவன், "அவர் லெவின்ஸ்கி [Levinski's Restaurant) உணவகத்திற்கு செல்லப்போகிறார்" என்பதை ரெபேக்காள் மூலம் அறிந்துக்கொண்டேன். இந்த நகரத்திலேயே சிறப்பான உணவகத்தை கொண்டுள்ளேன், என்னுடைய உணவகத்தில் சாப்பிடாமல், அவர் ஏன் அந்த உணவகத்தில் சாப்பிட வேண்டும்? என்னுடையதுதான் சிறப்பானதாக இருக்கும். நான்... நான் தலைமைச் சங்கத்தின் [Sanhedrin யூதர்களின் தலைமைக் குழு] முக்கிய உறுப்பினர் மற்றும் இந்த நகரத்திலே அதிமுக்கியத்துவம் வாய்ந்தவன். நான் மிகவும் அறிவுக் கூர்மையுடையவன். சிறப்பான உணவுகளை வைத்திருக்கிறேன். ஆனால் ஏன் அவர் அங்கு அவர்களுடன் சாப்பிடப்போகிறார்? ஏனெனில், அவர்களுடன் சாப்பிடுவதற்காக அவரை அவர்கள் அழைத் திருந்தனர். இயேசு தன்னை எங்கு அழைக்கிறார்களோ அங்கு செல்கிறார். அது சரி. அவர் தன்னை ஒருபோதும் உங்கள் மீது நிர்ப்பந்திப்பதில்லை. நீங்கள் தான் அவரை அழைக்கவேண்டும். அதுதான் உண்மை. 16. மேலும் அவன், "அங்கே செல்ல வேண்டுமானால், இங்கே இந்தக் குறிப்பிட்ட வழியில் அல்லேலூயா அவென்யூ [Hellelujah Avenue] விற்கு அவர் செல்லவேண்டும்" என்று எனக்கு தெரியும். அவர் அல்லேலூயா அவென்யூவை கடந்துச்செல்லும் போது அந்த முனையில் திரும்பி உணவகத்திற்குச் செல்லும் அந்த இடத்தில் நான் அவருக்காகக் காத்திருக்கப் போகிறேன். அவர் அந்த திருப்பத்திற்கு வரும்போது நான் மாத்திரம் அந்த இடத்தில் இருந்து அவரை நன்றாக அருகில் நின்று பார்க்கப்போகிறேன். எனக்கு அறிவுக் கூர்மை உண்டு என்று நான் அறிவேன். நான் அந்த மனிதனைப் பார்க்கும்போது அவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளுவேன்". அது சரி... உன்னால் முடியும். ஆகவே அவன் அந்த திருப்பத்திற்குச் சென்று அதன் முனையில் நின்றுகொண்டு, "இப்பொழுது நான் இங்கு நிற்கப் போகிறேன். அவர் அந்த திருப்பத்திற்கு வரும்வரை காத்திருந்து, அவரைச் சரியாகப் பார்த்து விடப் போகிறேன். பின்பு அந்த நபரைக் குறித்த எல்லா வற்றையும் நான் அறிந்துகொள்ளுவேன். அடுத்த ஓய்வு நாள் காலையில் நான் என் வகுப்பில் நிற்கும்போது, இந்த கலிலேய தீர்க்கதரிசியைக் குறித்து நான் சொல்லுவேன்; இப்போது அவரை நான் காணும்வரை காத்திருக்க வேண்டும்." 17. அவன் அந்த முனையில் நின்றுகொண்டு தன் பாதங்களை தட்டிக்கொண்டிருந்தான். அவன் முகம் சிவந்திருந்தது. ஏனெனில், அவன் அங்கு வெளியே தள்ளிவிடப்பட்டிருந்தான். அவன் தன்னை கவனத்திற்குரிய ஒருவனாக எண்ணிக்கொண்டிருந்தான். நீ உன்னை கவனத்திற்குரிய ஒருவனாக எண்ணும் வரை நீ எங்கும் செல்லமுடியாது. நீ அதை நினைவில்கொள். நீ என்னவாக இருக்கிறாயோ அதிலிருந்து வெளியேற வேண்டும். எப்படியும் நம்மில் அதிகப்படியாக எண்ணிக் கொள்வதற்கு எதுவும் இல்லை. இங்கு சில காலங்களுக்கு முன்பு, நான் டென்னஸியில் (Tennessee) இருந்தேன். நான் அங்குள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு சென்றிருந்தேன். அங்கே அவர்கள் மனித சரீரத்திற்கான, மதிப்பீட்டை (Estimation] வைத்திருந்தனர். அதாவது, 150 பவுண்டு எடை கொண்ட மனிதனின் உடலிலுள்ள இரசாயனங்களின் மதிப்பு 84 செண்டுகள் ஆகும். அங்கே இரண்டு பையன்கள் நின்று அதைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். நீங்கள் பெற்றுள்ள இந்த மனித சரீரத்தில் உள்ள கால்சியத்தின் அளவு ஒரு கோழியின் கூட்டை வெள்ளையடிப்பதற்கு [தெளித்து வண்ணம் ஏற்றுவதற்கு] போதுமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் அல்லது அது போன்ற உங்கள் சரீரத்தில் உள்ளவை. அத்தகைய இந்தச் சரீரத்தில் பத்து டாலர் மதிப்புள்ளத் தொப்பியையும், இந்த 84 செண்டுகளின் மீது 50 டாலர் மதிப்புள்ள கோட்டையும் (coat-வெளிப்புற ஆடை) போட்டுக் கொண்டு, அதை உங்கள் தகுதிக்கு மிகவும் குறைவானதாக எண்ணிக்கொண்டு [மழை பெய்தால் அது உங்களை மூழ்கடித்து விடும்] உங்களைக் குறிப்பிடத்தக்க ஒரு நபராக எண்ணிக் கொள்கிறீர்கள். இப்பொழுது அது சரி... மனித இனம் அந்த விதமாகத் தான் நடந்து கொள்கிறது. இப்பொழுது, அது சரியாக உள்ளதா? அது சரி. குறிப்பிடத்தக்க நபர்... நீங்கள் 84 செண்டுகள் [Cents) மதிப்புடையவர்கள். அது சரி. ஒரு பையன் மற்றொரு பையனை பார்த்துச் சொன்னான், ஜான், நாம் அதிகப்படியாக ஒன்றுமில்லை இல்லையா? 84 செண்டுகள் [Cents] மாத்திரமே. நான் அந்த பையன்களைத் தொட்டுக் கூறினேன். ஆனால் பையன்களே, உங்களுக்கு ஒரு ஆத்துமா உள்ளது, அதன் மதிப்பு பத்து மில்லியன் உலகங்கள் ஆகும். அதை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த 84 செண்டுகள் [Cents) அவ்வளவு மதிப்புடைய தல்ல; ஆனால் இந்த பத்தாயிரம் உலகங்கள் தான் உங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறது. 18. ஆகவே, அந்தச் சிறிய மனிதன் அங்கு நின்றுகொண்டு, "உனக்குத் தெரியுமா? என்னைப்போல மிகவும் சிறிய உருவமாக இருக்கும்போது, அங்கே பார்த்த அதே அளவுக் கூட்டம்... நான் கூறுவது சரியாக இருக்குமென்றால், அவரை ஒரு நொடி பார்ப்பதற்குள், அவர்கள் எல்லாரும் அவர் பின்னே வந்துவிடுவார்கள்" என்று சிந்திக்கத் தொடங்கினான். அது சரியே. அவர்கள் அவருடன் ஒருமுறை தொடர்பில் வந்துவிட்டால், அங்கிருந்து அவர் எங்கு செல்கிறாரோ, அந்த எல்லா இடங்களுக்கும் அவர்களும் செல்லுகிறார்கள். எனவே, அவன் (சகேயு), "அவர்கள் இங்கே வருவார்களானால், நான் மிகவும் குள்ளமானவனாக இருக்கிறேனே", "அங்கே பார்த்த அந்தக் கூட்டத்துடன் சேர்ந்து, அங்கும் இங்கும் இடையில் சேரும் கூட்டமும் இங்கு வந்தால், நான் முன்பு அங்கே நின்று கொண்டிருந்ததை விட இங்கு நின்று கொண்டிருப்பது எந்த வகையிலும் சிறந்ததாக இருக்கப் போவதில்லை." அவன் சிந்திக்க ஆரம்பித்தான், "இப்போது நான் என்ன செய்வது?" நீங்கள் இயேசுவைக் காணத் தீர்மானித்திருந்தால், அவரைக் காண்பதற்கு தேவன் ஒருவழியை உங்களுக்காக உண்டு பண்ணுவார். ஆகவே அவன் சிந்திக்க ஆரம்பித்தான், "அவனால் என்ன செய்யமுடியும்?" அவனுக்கு அருகில் ஒரு காட்டத்தி மரம் நின்று கொண்டிருந்தது. அது ஒரு சிறந்தத்திட்டம் என்று அவன் நினைத்தான். "நான் அந்தக் காட்டத்தி மரத்தின் மேலே ஏறிக்கொள்ளப்போகிறேன். அதில் நான் ஏறினவுடன் எனக்கு ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்துக்கொள்வேன். அவர் இந்த வழியாகக் கடந்து செல்லும்போது. அவரை நான் மாத்திரம் நன்றாகப் பார்க்கமுடியும்". 19. ஆனால் இப்பொழுது அடுத்தது, அவன் எப்படி அதில் ஏறப்போகிறான், அவன் குள்ளமானவன் இல்லையா? அவன் தன்னுடைய சிறந்த ஆடைகளை உடுத்தியிருந்தான்; தன்னால் இயன்றவரை நேர்த்தியாகத் தன்னை அலங்கரித்திருந்தான். கவனியுங்கள், இந்த உலகம் கவர்ச்சியை விரும்புகிறது. இயேசு கவர்ச்சியாய் இருக்கவில்லை. அவர் ஒரு வெறுமையான, சாதாரண மனிதனாவார். இன்றைய சுவிசேஷமும் கவர்ச்சியான வகையில் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் அது வெறும் ஒரு பழங்கால வகையிலான இரட்சிப்பாகத்தான் இருக்கிறது. அவர் மாறவே இல்லை; அவர் மாறாதவராயிருக்கிறார். இந்த உலகம், நீங்கள் அவ்விதமாகத்தான் ஆடை அலங்காரம் செய்துகொள்ளவேண்டும் என்றும், நீங்கள் குறியிடத்தக்க ஒருவராக இருக்க வேண்டுமானால் சிறந்த விதமாக அணிய வேண்டும் என்றும் நினைக்கிறது. காங்கிரஸின் உறுப்பினர் உப்ஷா எப்பொழுதும் சொல்வது போல், "நீங்கள் இல்லாத ஒன்றாக இருக்க முடியாது". அது சரி. இன்றைய மக்களிடையே அநேக விதமான ஊக்குவித்தல் உள்ளது. ஏதோ ஒன்றாக இருக்க முயல்வது, வித்தியாசமாக பேச முயல்வது, நீங்கள் இல்லாத ஒன்றாக இருக்க எதை எதையோ செய்வது போன்றவை. புருஷர்கள் தாங்கள் இருக்கவேண்டிய முறையில் இருப்பதை காணும் நாளில் நான் வாழ வேண்டும் என்று ஜெபிக்கிறேன். அப்பொழுது எல்லா புருஷர்களும் தங்களை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்வார்கள். தேவனே நாட்களைத் துரிதப்படுத்தும். தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எல்லா மனிதர்களும் தாங்கள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படியாக இருக்கட்டும். நான் கிறிஸ்துவை விசுவாசிக்காவிட்டால், அவருக்கு எதிராக இருந்திருப்பேன். நான் இங்கே அவருக்கு எதிராகப் பேசிக் கொண்டிருந்திருப்பேன். ஆனால், நான் அவரை விசுவாசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன். நான் எனக்குள் இருக்கும் எல்லாவற்றுடனும் சேர்த்து அவருக்குரியவனாக இருக்கிறேன். நான் அவருக்கானவன். 20. அந்த தீர்க்கதரிசியானவர் இந்த வழியாகக் கடந்து செல்வதை தன்னால் பார்க்க முடியுமா என்று தனக்குள் சகேயு வியந்து கொண்டிருந்தான். ஆனால் அங்கே வீட்டில் இருக்கும் ரெபேக்காள் எல்லா நேரமும் ஜெபித்துக் கொண்டிருந்தாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். "ஓ! தேவனே, இன்றைக்கு சகேயு எப்படியாவது இந்தத் தீர்க்கதரிசியானவருடன் தொடர்பு கொள்ள ஏதாவது ஒரு வகையில் ஒரு வழியை ஏற்படுத்தும். ஏனென்றால், அவர் ஒரு நல்ல மனிதர்; அவர் ஒரு நேர்மையானவர். இவர், அந்த கலிலேயா தீர்க்கதரிசியுடன் எப்படியாவது தொடர்பு கொள்ள நீர் அனுமதித்தால், அவர் ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவனாகி விடுவார் என்று நான் விசுவாசிக்கிறேன். எனவே, தேவனே நீர் என்னுடைய எளிமையான அன்பு கணவருக்கு உதவிசெய்ய வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன்" என்று ரெபேக்காள் ஜெபித்தாள். இத்தகைய அநேகப் பெண்கள் நமக்கு இன்றைக்கு தேவை என்பதை தேவன் அறிவார். பெண்மை உடைக்கப்படும் போது, நாட்டின் முதுகெலும்பு உடைந்து விடுகிறது. இன்று நம்முடைய அமெரிக்க பெண்கள் இருக்கும் இடத்திற்கு பெண்கள் வருவார்களானால், நம்முடைய அமெரிக்க பெண்கள் நடந்து கொள்ளும் முறை மிகவும் அவமானத்துக்குரியதாகும். நான் செய்தித் தாளிலிருந்து ஒரு குறிப்பு எடுத்து வைத்துள்ளேன், கடந்த போருக்காக கடல்கடந்து சென்ற 60% புருஷர்கள் திரும்பி வருவதற்கு முன்பே, தங்கள் மனைவிகளிடமிருந்து விவாகரத்துப் பெற்றுள்ளனர். அவர்களுடைய மனைவிமார்கள் இத்தகைய பாதுகாப்பு அமைப்புகளில் பணிபுரியும் மற்றவர்களுடன் ஓடிப்போய் விட்டனர். அவர்களுக்குப் பாதுகாப்பு அமைப்புகளில் எந்த வேலையும் இல்லை. ஒரு பெண்ணிற்கான இடம் என்பது அவளுடைய குழந்தைகளுடன் அவளுடைய வீட்டில் இருப்பதே ஆகும். மேலும் அவள்... அவளுடைய கணவன் உடல் நலமில்லாமல் இருந்தால், அவள் வேலை செய்யவேண்டும், அது முற்றிலும் வேறுவிதமானது. ஆனால், ஒரு பெண்ணிற்குரிய இடம் அவளுடைய வீட்டிலுள்ள சமையலறை தான். அதைவிட்டு அவள் வெளியேறினால், அவள் தன்னுடைய ஸ்தானத்தைவிட்டு வெளியேறுகிறாள். முற்றிலும் சரியே. 21. இன்றைக்கு அவர்கள் செய்வதைப்போல் பெண்கள் சிகரட்டைப் புகைக்கிறார்கள். தங்களை கிறிஸ்த \வர்கள் என்று அழைத்துக்கொள்ளும் பெண்களும் கூட புகைப் பிடிக்கிறார்கள். நான் அறிந்தமட்டில், ஒரு பெண் செய்யக்கூடியதிலேயே மிகவும் கீழ்த்தரமான செயல் என்றால், அது புகைப்பிடிப்பது தான். அது சரி. இந்த கருத்தைக்குறித்து நான் ஒருபோதும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். இந்த தேவனுடைய தூதனை, நீங்கள், தேவனுடையவராக தீர்மானித்து அறிந்தும், அந்த நியாயத்தீர்ப்பு மேடைக்கு புகைப் பிடித்தவண்ணம் வருவீர்களானால் உங்களுக்கான வாய்ப்பு மிகவும் குறைவானதாக இருக்கும். அது சரி. உங்களுக்கு எந்தப் இல்லை. அது ஒரு மிகப்பெரிய நாசவேலையாகும். அவ்வாறு இருப்பதே நாம் இந்தத் தேசத்தில் பெற்றுள்ள மிகப்பெரிய அசுத்தமான, தொடர் பத்திரிக்கையில் வெளியிடுவோரின் செயல்முறையான செய்தியாயுள்ளது. அமெரிக்காவில், குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் 80% சதவிகித பெண்கள், புகைபிடிக்கும் பெண்கள், தங்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கக்கூடிய நிலையில் இல்லாததால், அவர்களால் தங்கள் குழந்தைகளை வளர்க்க முடிவதில்லை. அவர்கள் நிக்கோடின் விஷத்தைக் கொண்டிருப்பதால், 18 மாதமாகுமளவும் தங்கள் குழந்தைகளுக்குப் பாட்டிலில் பால் புகட்ட வேண்டியுள்ளது. தொடர் பத்திரிக்கை... ரஷ்யா ஒருபோதும் நமக்குத் தீங்குசெய்யப் போவதில்லை. நாம்... நம்முடைய சொந்த ஒழுக்க விதிகளே நம்மைக் கெட்டழியச் செய்கிறது. ஆப்பிள் பழத்தைக் கொத்தும் ராபின் பறவையால் ஆப்பிள் பழத்திற்குச் சேதம் வருவதில்லை. ஆனால் அதனுள் அதன் மையத்தில் இருக்கும் புழுதான் அதற்குச் சேதத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்கா தன்னுடைய சுெயொழுக்கக் கேட்டினால் தான் தோற்கடிக்கப்படுகிறது. அது சரியே. தாய்மை எங்கு முறிக்கப் படுகிறதோ தேசத்தின் முதுகெலும்பு அங்கே முறிக்கப் படுகிறது. 22. நான் ஆப்பிரிக்காவிலுள்ள ஹாட்டன்டாட்டில் (Hottentot) இருந்தபோது, ஒருவர் என்னிடம், "சகோதரன் பிரன்ஹாமே, அங்கே அமெரிக்காவில் உங்களிடையே நல்லப் பெண்கள் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்டார். உங்களுடைய எல்லா பாடல்களும் உங்கள் பெண்களைக் குறித்து அருவருப்பான வைகளைக் கொண் டுள்ளது". நான் அப்படியே என் தலையை குனிந்து நடந்து அப்புறம் போய்விட்டேன். இது உலகத்திலுள்ளவைகளிலேயே மிகவும் மோசமானதாகும். ஓ! நீங்கள் எல்விஸ் பிரஸ்லி மற்றும் அது போன்றவர்களை உயர்வாக எண்ணி, தெய்வமாகக் கொண்டாடி, அத்தகையவர்களின் காரியங்களை உங்கள் வீடுகளில் அனுமதிக்கிறீர்கள். அந்தக் குப்பையை உங்கள் வீட்டிலிருந்து வெளியே எறியுங்கள், நாம் கிறிஸ்தவர்கள். பருந்தினங்கள் இறந்த உடல்களைத் தின்னும். ஆனால் நாம் பருந்துகள் அல்ல. நாம் புறாக்கள். நான் அதைக் குறித்து தான் இந்த இரவில் போதிக்கப்போகிறேன். எல்லாம் சரி. உங்கள் இருதயங்களில் உள்ள விருப்பங்கள் சரியானதாக இருந்தால், உங்கள் பசி [ஆவல்] சரியானதாக இருந்தால், நீங்கள் சரியானதைப் புசித்து, சரியானதைச் செய்வீர்கள். அப்படிச் செய்வது உங்கள் இருதயத்தில் இருக்கும். 23. இப்பொழுது இந்த உலகம் கவர்ச்சியை விரும்புகிறது. அவர்களுக்கு பழைய நாகரீகமுடைய போதகர்கள் இனி வேண்டியதில்லை. நாங்கள் போதிக்கும் பழைய நரக அக்கினி மற்றும் கந்தகம் குறித்த போதகங்கள் அவர்களுக்குத் தேவையில்லை. இன்றைக்கு, அவர்களுக்குத் தேவையானது, சுருண்ட தலைமுடியையுடைய ஹாலிவுட் ஸ்டைலில் சிறிய ஃபிராக் டெயில் கோட் (Frock Tailed Coat] அணிந்து... அது என்னவென்று எனக்கு தெரியவில்லை... அவர்கள் அங்கு நின்று சில நகைச்சுவைகளை சொல்லுகிறார்கள். இன்றைக்கு நம்மிடையே ஆர்தர் காட்ஃபிரே (Arthur Godfrey) மற்றும் அதைப்போன்ற பலருடைய நகைச்சுவைகள் நிறைய உள்ளன. இவர்களுடையது என்று நீங்கள் கூறுவதும் இதைப்போன்றதுமான நிறைய நகைச்சுவைகள் உள்ளன. ஆனால், இன்றைக்கு நமக்குத் தேவையானதெல்லாம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையுடன் கூடிய பழைய நாகரீகத்தினால் ஆன சுவிசேஷமும், பிரசங்கபீடம் தொடங்கி உடைமைகளை வைக்குமிடம் [Cloak Room) வரையிலான சுத்திகரிப்பும் தான். அது சரியே. புருஷர்களே மற்றும் ஸ்திரீகளே அது நமக்கு தேவை. நம்மிடையே அதிகமான ஹாலிவுட் வகை ஊழியமும், நிறைய நடிப்புகளும் அதைச் சார்ந்த காரியங்களும் தான் உள்ளன. நமக்கு உண்மையான மற்றும் நேர்மையான இயேசு கிறிஸ்து தான் தேவை. ஆமென். ஆகவே, அத்தகைய கவர்ச்சி இயேசுவிடம் இல்லை. அவன் அணிந்திருந்த பழைய சிறந்த அங்கியோ, சீராகச் சீவப்பட்ட அவனுடைய தலைமுடியோ, மற்றும் அவன் அவனுடைய சிறந்த எகிப்தில் உற்பத்தி செய்யப்பட்ட அங்கியோ, இயேசு கிறிஸ்துவின் கவனத்தை ஈர்க்கவேயில்லை. நீ எந்த அளவு எளிமையாக ஆடை அணிந்திருந்தாலும், அல்லது நீங்கள் எப்படி இருந்தாலும், அதைக் குறித்து அவருக்கு அக்கறையில்லை. அவர் பார்த்துக் கொண்டிருப்பது உங்கள் இருதயத்தைத் தான். 24. ஆகவே, சகேயு "இப்பொழுது என்னால் அந்த மரத்தில் ஏறமுடியாது. அப்படி நான் ஏறினால், நான் அவரை சந்திக்கக் கீழே இறங்கி வரவேண்டியிருக்கும், நான் அவருக்கு தென்படமாட்டேன்" என்று நினைத்தான். இங்கு என்னுடைய சபையில் சில காலங்களுக்கு முன்பு, அங்கே இருந்த சிறு பெண்ணை அந்த இரவு சிறப்புப்பாடல் பாடச் சொன்னேன். அவள் ஒரு அற்புதமான சிறிய பாடகி. மேலும் அவள் ஒரு எளிமையான உண்மையாகவே எளிமையான குடும்பத்திலிருந்து வந்தவள். அவர்கள் கடினமானப் பாதையில் இருந்தனர். அவள் தன்னால் பாட இயலாது என்று கூறினாள். நான் அவளை ஏன் என்று கேட்டேன். அவள் அந்தக் காரணத்தை கூறவில்லை. அவள் வெளியே சென்று விட்டாள். அவள் மற்றொரு சிறுமியிடம் தன்னுடைய தலைமுடிக்கு மேனிகீயூர் (தலைமுடிக்கு அளிக்கப்படும் ஒருவித சிகிச்சை) செய்து கொள்ள தன்னிடம் பணம் இல்லை என்று கூறியிருக்கிறாள். உங்களுக்குத் தெரியுமா அந்த ஒருவகையான சுருள வைக்கும் காரியம். எனவே அவள் தன்னால் இயலாது என்று கூறினாள்... அது தவறு. எனக்கு எனக்கு அது தெரியும். அது சரியில்லை. அது என்ன? அவளுடைய தலைமுடியில் அது நிரந்தரமாக - நிரந்தரமாக இருக்கக் கூடியது. அது சரி. மேனிகீயூர் என்றால் என்ன? கைநகங்கள். ஓ, விரும்பினது அவள் தன் தலைமுடிக்கு நிரந்தர அலங்காரத்தை செய்ய அவளிடம் பணமில்லை. நான் அந்தப் பெண்ணிடம், "உனக்குத் தெரியுமா, இப்பொழுது நான் உன்னை பாட அனுமதிக்க மாட்டேன்." அது சரி. நீ அங்கே வருவது உன்னை காட்சிப் பொருளாக காண்பிப்பதற்கோ அல்லது அந்த மக்கள் உன்னை காட்சிப்பொருளாக பார்ப்பதற்கோ அல்ல; நீ அங்கே இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பாடத்தான் வரவேண்டும். அது சரியே. அதைத்தவிர வேறு எந்த நடத்தையையும் தேவன் மறுத்துவிடுவார் என்று கூறினேன், உண்மை. 25. ஆகவே சகேயு அணிந்திருந்த அவனுடைய சிறிய அங்கி எந்தவித வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் நீ இயேசுவைக் காணவேண்டும் என்று உறுதியாக தீர்மானிப்பாயானால், அவரைக் காண்பதற்கான ஒரு வழியைத் தேவன் உனக்கு ஏற்படுத்துவார். சகேயு, "இந்த மரத்தில் இப்பொழுது என்னால் ஏறமுடியாது. ஆனால் அதற்கு ஒருவழி இருக்க வேண்டும்" என்று கூறிக்கொண்டான். தேவன் எப்பொழுதும் ஒரு வழியைக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவன் அங்குள்ள ஒரு மூலையைக் காண நேர்ந்தபோது, அங்கு அந்த நகரத்தின் குப்பைக் கூடை வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது அவன், "நல்லது, நான் அங்கே போய் அந்தக் குப்பைக் கூடையை எடுத்து, இந்த இடம் வரை அதை இழுத்துக் கொண்டுவந்து போட்டு, பின்னர் அதன்மேல் ஏறி, பின் மரத்தில் வேகமாக ஏறிவிடுவேன்" என்று நினைத்தான். மேலும், இது ஒரு மிகவும் நல்ல யோசனை என்று அவன் நினைத்தான். உங்களுக்குத் தெரியுமா, நாம் ஏறியிருக்கும் உயரமான குதிரையிலிருந்து நம்மை எப்படி இறக்கவேண்டும் என்பதை தேவன் அறிவார். அவன் அந்தக் குப்பைக் கூடைகள் இருக்கும் மூலைக்கு சென்று குப்பைக் கூடையை எடுக்க முயன்ற போது, அவை நிரம்பி இருக்கவும், அதில் போடப்பட்ட குப்பைகளை நகரத்துக் குப்பை சேகரிப்பாளர் இன்னும் வந்து எடுத்துக்கொண்டு போகவில்லை என்பதையும், கண்டான். அங்கே இருந்த எல்லாக்கூடைகளும் நிரம்பியிருந்தன. அவன் பார்வைக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை. அப்படி அவன் நின்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, அந்த வளைவில், ஜனங்கள் இறங்கிவரும் சத்தத்தைக் கேட்டு, "நான் வேகமாக செயல்பட வேண்டும், ஏனெனில் அவர் அதிக தூரத்தில் இல்லை, என்னால் பெரிய சத்தத்தைக் கேட்கமுடிகிறது" என்று கூறிக்கொண்டான். நான் அதை விரும்புகிறேன். எங்கெல்லாம் நீங்கள் இயேசுவைக் காண்கிறீர்களோ அங்கே ஒரு சிறு சத்தம் இருக்கத்தான் செய்யும். அது என்னுடைய ஐரிஷின் (அயர்லாந்து) இயற்கை பண்புகளோடு பொருந்துகிறது. குறிப்பாக, அதிலிருந்து மாற்றப்பட்ட போதும். 26. தேவாலயத்தில், ஆசாரியனான ஆரோன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க அபிஷேகிக்கப் படும்போது, அவன் மாதுளம்பழம் மற்றும் மணியையுடைய வஸ்திரத் தொங்கலைக் கொண்ட அங்கியை அணிந்திருப்பான். அவன் தேவனுடைய பிரசன்னத்தில் கொல்லப்படாமல், இன்னும் உயிரோடு இருக்கிறான் என்பதை அவர்கள் சொல்வதற்கான ஒரேவழி அவன் நடக்கும் போது அந்த மணியும், மாதுளம்பழம் ஏற்படுத்தும் சத்தம் மட்டுமே அவன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். நான், எப்பொழுதெல்லாம் ஒரு சிறிய "ஆமென்" அல்லது "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று கேட்கிறேனோ, எங்கோ, இன்னும் சிறிது ஜீவன் இருக் கிறது? என்று நினைத்துக்கொள்கிறேன். எங்கிருந்தோ வரும் மிகவும் சிறிய சத்தம். சின்ன சகேயு, அந்தக் குப்பைக் கூடையை இழுக்க முயன்றாலும், அவனால் முடியவில்லை. அவன், "நான் இதைத் துரிதமாக செய்யவேண்டும்" என்று கூறிக் கொண்டு, அவன் தன் கைகளை குப்பைக் கூடைக்கு கீழே கொண்டு சென்றான், ஏனெனில் அவன் இப்பொழுது இயேசுவைக் காணவேண்டும் என்று உறுதியான தீர்மானத்துடன் இருந்தான். இப்பொழுது அவன் புதிய வஸ்திரங்களை அணிந்திருந்தாலும், குப்பைக் கூடையை தன் கைகளில் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். அப்பொழுது, அவன் யாரோ சிரிப்பதைக் கேட்டு யாரென்று பார்த்தபோது, அது அவனுடைய தொழில் போட்டியாளன். அந்த மூலையில் நின்று கொண்டு, "நீங்கள் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன், சகேயுவுக்கு ஒரு புது வேலைக் கிடைத்துள்ளது. நல்லது, அருமை சகேயு, உணவகத்திற்கு உரிமையாளர் இப்பொழுது நகரத்தின் குப்பை சேகரிப்பாளராக மாறிவிட்டார்" என்று சொன்னான். 27. ஓ, அவனுடைய சிறிய முகம் சிவந்தது; அவன் தன்னை சுற்றிலும் பார்த்தான். உங்களுக்கு தெரியுமா, தேவன், உங்களை இயேசுவினிடத்தில் வரவழைப்பது மிக-மிக எளிமையான வகையில், சில சமயங்களில் அது உங்கள் முகத்தை சிவக்கச்செய்யும். அவர் உங்களை, நீங்கள் செய்யமுடியாது என்று எண்ணின காரியங்களை செய்ய வைப்பார். ஆனால் நீங்கள் உறுதியான தீர்மானத்துடன் இருப்பீர்களானால் நீங்கள் அதைச் செய்வீர்கள். ஆகவே அவன் அங்கே சென்றபோது நியாயமான அவனுடைய கோபம் அதிகரிக்க ஆரம்பித்தது. அந்த வேளையில் அவனால் அதை மறுக்க முடியவில்லை. சில நேரங்களில் மக்கள், "நான் அங்கு கீழே செல்லுவேன்; நான் அதைக் கண்டறிவேன்; நான் திரும்பிச் செல்லுவேன்" என்று சொல்வதுண்டு. ஆனால் நீங்கள் அப்படிச் செய்யும்போது, நீங்கள் எந்த நபருடைய கூட்டங்களைக் குறித்து விமர்சித்தீர்களோ அந்த நபர் அங்கே அமர்ந்து கொண்டு, "நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்" என்று கூறுவார். ஓ, நான்... என்... "அது என்னுடைய வியாபாரத்தை பாதிக்கும் என்பது உலகளாவிய நிச்சயம்." பார்த்தாயா? ஆனால், நீ அந்த சூழ்நிலையில் இருக்கும்போதே பிடிபட்டாயிற்று. நீ அந்தவிதமாகத்தான் இந்தக் காலை வேளையில் இருந்தாய்; நீ இப்பொழுது பிடிக்கப் பட்டாயிற்று; நீ அவர்களுக்கு மத்தியில் இருக்கிறாய்; இதோ இங்கு இருக்கிறாய். அவன் முகம் சிவந்தது. சுற்றிலும் பார்த்தான், பின்னர் அவன் கூறினான், "நல்லது, இது எப்படியாவது இருந்து விட்டு போகட்டும். நான் அதைக் காணவேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறேன். அதுதான் வழி, அதைக் காண்பதற்காக உறுதியாக இரு. என்ன? தேவன் உன்னுடைய இதயத்தில் இந்த நசரேயனாகிய இயேசுவை கவனிக்கவும். இத்தகைய தேவனுடைய பெரிய எழுப்புதல் தேவனிடமிருந்து தான் வந்திருக்கிறதா என்ற உண்மையை அறியவும், உன்னுடைய வேதத்தை திறந்து அதில் தரித்திரு; இதைச் செய்வதற்கு அதுதான் வழி. 28. எனவே அவன் அந்தப் பழைய குப்பை கூடையை மீண்டும் எடுத்து அதை மிகவும் இறுகப் பற்றிக் கொண்டு, இயேசுவை நான் காணவேண்டும் என்ற முழு உறுதியுடன் நடந்தான். அதை அங்கே மரத்திற்கு அருகே கொண்டு போய் வைத்தான். இதோ, அவன் தன்னுடைய ஆடைகள் முழுவதும் குப்பையுடன் காணப் பட்டான். தேவனுக்குக் காரியங்களை எப்படி நடப்பிப்பது என்று தெரியும், உனக்குத் தெரியுமா, உன்னை எப்படித் தாழ்மைப்படுத்த வேண்டும் என்று தேவனுக்குத் தெரியும். சில நேரங்களில் அவர் அதை வித்தியாசமான வழிகளில் செய்வார். ஆனால், அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை அவர் அறிவார். உன்னிலுள்ள உன்னுடைய தன்னம்பிக்கையை உன்னைவிட்டு எப்படி வெளியே எடுப்பது (Take that starch out of you) என்பதை அவர் அறிவார். உன்னை, இருக்க வேண்டிய சரியான மனிதனாக மாற்றுவது எப்படி என்பதை அவர் அறிந் திருக்கிறார். அவர் உன்னுடைய உள்ளிந்திரியங்களை அறிந்திருக்கிறார். அதிக வசீகரம், அதிகமான வெளிப்புறக் காரியங்கள் என்று உன்மீது நிறையக் காரியங்களைப் போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்; "ஓ அங்கே நிற்கும் கார்களின் கூட்டத்தில் நடக்கும் வியாபாரத்தை காட்டிலும் என்னுடைய வியாபாரம் சிறப்பாக இருக்கிறது" என்று நீ நினைக்கலாம். ஆனால், அதை உன்னைவிட்டு எடுத்துப் போடுவதற்கான காலத்தை தேவன் அறிந்திருக்கிறார்; அவர் அதை மகத்தான வழிகளில், வித்தியாசமாகச் செய்வார். 29. அங்கே அந்த மரத்தின் அருகில் சகேயுவை அவர் நிற்க வைத்தார். சகேயு நினைத்தான், "நல்லது". ஆனால், அவர்கள் சிரித்தார்கள், அவர்கள் அங்கே தெருவை நோக்கிப்போனார்கள். அவர்கள் அந்தத் தீர்க்கதரிசியை கிண்டல் செய்வதற்காக அங்கேப் போனார்கள். சகேயு, "இங்கே பார் என்னுடைய செல்வாக்கு பாழாகிவிட்டது. இதோ இந்த இடத்தில் நான் நின்றுகொண்டு இருக்கிறேன். என்னுடைய ஆடைகளும் பாழாகிவிட்டது; என்னுடைய செல்வாக்கும் பாழாகி விட்டது" என்று கூறினான். நீ மிகவும் உயர்ந்ததாக, கம்பீரமானதாக மற்றும் எல்லாமுமாக நினைத்த உன்னுடைய செல்வாக்கை இழக்கும்போது தான் நீ இயேசுவை கண்டடைவதற்கான சரியான சூழ்நிலைக்கு வருகிறாய். நீ சரியாக தயாராகியப் பின் இயேசுவை தேடு, உனக்குள் இருக்கும் அந்த தன்னம்பிக்கையை முழுவதுமாக வெளியே எடுத்தப்பின் தான் நீ இயேசுவை காணத் தயாராகயிருப்பாய். ஆகவே, சகேயு கூறினான், "வேறுயாரும் வருவதற்குள் நான் இந்த மரத்தில் ஏறிவிடவேண்டும்." எனவே அவன் மரத்தில் ஏறி அங்குமிங்கும் திரும்பி, மரத்தின் மீது ஏறிவிட்டான். ஒரு வழியாக அவன் மரத்தில் ஏறிவிட்டான். ஆனால், "இல்லை, அந்த மரக்கிளை என்னை தாங்கிப் பிடிக்கமுடியாது". அவன் எங்கே இரண்டு மரக்கிளைகள் சந்திக்கிறதோ (Y- இந்த வடிவில் தோன்றும்] அதைத்தேடினான். பின்பு அவன், சரியாக இதுதான் நான் அமர்வதற்கு ஏற்ற இடம்; நல்ல வலிமையானக் கிளை என்று கூறினான். அது சரியே. எங்கே இரண்டு வழிகள் சந்திக்கின்றதோ, அதாவது தேவனுடையதும் உன்னுடையதும்; அதுதான் நீ அமர்வதற்கு ஏற்ற சரியான இடமாகும். அங்கே தான் மாற்றம் வருகிறது. 30. ஆகவே, அவன் அந்த மரக்கிளையில் சரியாக அமர்ந்து தயாராகிக் கொண்டான். அந்த நகரத்தின் தொழிலதிபரான, சிறந்த மனிதன் சகேயு தன்மீது முழுவதும் குப்பையின் துர்நாற்றத்துடனும் கையில் சிராய்ப்புகளுடனும் காணப்பட்டான். ஆனால், அவன் இயேசுவைக் காணவேண்டும் என்ற உறுதியான தீர்மானத்துடன் இருந்தான். சில சமயங்களில், தேவன் உங்களை மோசமான நிலைக்குக் கொண்டுவருவார். ஆனால் நீங்கள் அந்த வழியில் நின்று, இயேசுவைக் காண வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்துடன் இருப்பீர்களானால், நீங்கள் அவரைக் காண்பீர்கள். அங்கே அமர்ந்து கொண்டு தன்னுடையக் கைகளிலுள்ள சிராய்ப்புக்களைத் துடைத்தவாறு அவன் கூறினான், "உனக்குத் தெரியுமா, நான் இப்பொழுது நினைத்துப்பார்க்கிறேன், ரெபேக்காள் கூறினாள், அந்த மனிதன் ஜனக்கூட்டமான மக்கள் மத்தியில் நின்று கொண்டு, அந்த ஜனங்களுடைய சிந்தனைகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவாராம்". "என்னவென்று உனக்குத் தெரியுமா? நான் அவரிடம் தந்திரமான ஒரு விளையாட்டை ஆடப் போகிறேன், நான் இந்த மரத்தில் என் உருவத்தை மறைத்துக் கொள்ளப்போகிறேன். அவர் இந்த மரத்தில் இருக்கும் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது. மற்ற யாராலும் கூட என்னைப் பார்க்க முடியாது." ஆகவே, அவன் அருகிலுள்ள கிளைகளை எல்லாம் இழுத்து தன்னைச்சுற்றி நன்றாக அமைத்து, தன்னுடைய உருவத்தை முற்றிலுமாக மறைத்துக் கொண்டான். அப்படி அவன் செய்து கொண்டிருக்கிறபோது அங்கே ஒரு சிறு இலையை விட்டுவைத்திருந்தான். தேவையான போது அந்த இலையை ஒரு சிறு ஜன்னலைப் போல தூக்கிவிட்டு வெளியே நடப்பதை பார்க்கலாம். பாருங்கள்? "இங்கே மேலே நான் அமர்ந்திருப்பதை யாருமே ஒருபோதும் பார்க்கமுடியாது" என்று கூறிக்கொண்டான். நீ கவலைப்படாதே; நீ எங்கே அமர்ந்திருக்கிறாய் என்பதை தேவன் சரியாக அறிந்திருக்கிறார். முற்றிலுமாய் அறிந்திருக்கிறார். 31. ஆகவே அவன் அங்கே அமர்ந்து சிறிதுநேரம் காத்திருந்தான்; சத்தமானது கொஞ்சம் கொஞ்சமாக அவனை நெருங்கி வந்து கொண்டிருந்தது. சிறிதுநேரம் கழித்து அவன் கூறினான், "இப்பொழுது...", அங்கே சாத்தான் அமர்ந்து அவனுடன் பேசினான். "இப்பொழுது நீ அழகாகக் காட்சியளிக்கவில்லையா, நகரத்தின் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவன்; நீ எல்லா மருத்துவர்களையும் நன்றாய் அறிந்துள்ளவன், பல்வேறு சமுதாயத்திலுள்ள பல தரமான மக்களுடன் கோல்ப் விளையாடுபவன் மற்றும் பல" இப்பொழுதோ நீ இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறாய்; உன் மேலெல்லாம் குப்பைகள், மரத்தின் மீது உட்கார்ந்துகொண்டு இந்த வழியாக கடந்துச் செல்லப்போகிற பரிசுத்த உருளை போதகரைக் காண பார்த்துக் கொண்டிருக்கிறாய், எத்தகைய கனமற்ற நிலைக்கு நீ வந்திருக்கிறாய்". நல்லது, அவன் தன் சிராய்ப்புக் காயங்களை தொடர்ந்து பிய்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குப்பின் அவன் ஒரு சத்தத்தைக் கேட்டான்; அவன் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ அந்த வீதியின் மூலையில் ஒரு சிறந்த வலிமையான தோற்றமுடைய மனிதன் முன்னால் நடந்து வந்தான். தாழ்மையான, வழுக்கைத் தலையுடனும், பெரிய அகன்ற தோள்களுடனும் வந்தவன் அப்போஸ்தலன் பேதுரு. "நண்பர்களே ஓரமாக நில்லுங்கள்; போதகர் இந்தக் காலை வேளையில் இதோ வந்துகொண்டிருக்கிறார். அவர் நேற்றைய இரவு நீண்ட நேரம் விழித்துக் கொண்டிருந்தார். நாங்கள் வருந்துகிறோம், நாங்கள் அவர் இந்தக் காலை வேளையில் உங்களிடம் பேச இயலாது". 32. இதோ, மேலும் பதினொரு பேர் பக்கவாட்டில் வந்தனர், "பின்னாகத் தள்ளி நில்லுங்கள்" நண்பர்களே; இதைச் செய்வதற்காக நாங்கள் வருந்துகிறோம். நாங்கள் கடினமாக நடக்க விரும்பவில்லை; ஆனால் எங்களை மன்னித்து விடுங்கள், போதகர் இதோ சரியாக வந்து விட்டார். அவர் மிகவும் களைப்பாக இருக்கிறார். சொல்லப்போனால், அவர் மிகவும் பெரிய மனிதனும் அல்ல; அவர் உருவத்தில் மிகவும் சிறியவர் தான். சென்ற இரவில் ஏறக்குறைய எல்லா நேரமும் அவர் விழித்துக் கொண்டிருந்தார். மேலும் அவர் வியாதியஸ்தர்களுக்காக அதிகமாக ஜெபித்துக் கொண்டிருந்த போது அவரிடமிருந்து வல்லமை சென்றது. எனவே, "நாங்கள் வருந்துகிறோம். எனினும் நீங்கள் தள்ளி வழிவிட்டு நிற்க வேண்டும்". அவர்கள் இப்படியாக கூட்டத்தைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டிருக்கையில், சகேயு அந்தச் சிறு இலையை இழுத்துவிட்டு பார்த்து கூறினான், "இப்பொழுது இது மிகவும் ஏளனமானதாக இல்லையா". அவன் கண்கள் அந்த வழியாக பார்த்துக் கொண்டிருக் கையில் அங்கே அவன் தன்னுடைய நண்பன் ஒருவனைக் கண்டான், அந்த நண்பனுக்கு வியாதிப்பட்ட சிறு பெண்பிள்ளை இருந்தாள். அந்தக் குழந்தை சிலநாட்கள் மட்டுமே உயிருடன் இருக்கும் என்று மருத்துவர்கள் அவனிடம் சொல்லி விட்டனர். எரிகோவிலுள்ள தலைசிறந்த மருத்துவ நிபுணர், "அந்த குழந்தை இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே ஜீவிக்கும்" என்று கூறினார். அது ஒரு பயங்கரமான காய்ச்சல் ஆகும். குளிர்ந்த காற்றை ஒருமுறை சுவாசித்தாலே அந்த நோய்த்தொற்று அதிகரித்து அந்தக் குழந்தையை கொன்றுவிடும். 33. இதைக் கண்ட சகேயு, "இந்த மனிதனுடைய திட்டமே மகத்தான அந்த மருத்துவரின் அறிவுக் கூர்மையை எதிர்ப்பதே ஆகும். ஆகவே தான் அவன் அந்தக் குழந்தையை படுக்கையில் இருந்து எடுத்துக் கொண்டுவந்து, இதைப்போன்ற மோசமான காட்சியைக் காண வந்திருக்கிறான். ஏன், இது ஒரு தற்கொலை. நான் உங்களுக்கு சொல்லுகிறேன், அந்த மனிதன் மனநிலை மருத்துவ பிரிவுக்குப் போகவேண்டியவன். ஏன், அந்த மனிதன் இந்தவிதமாக வலுக்கட்டாயமாக வந்திருப்பது, எண்ணிப்பார்க்கவே மிகவும் பயங்கரமாயுள்ளது... சிறு குளிர்ச்சியும் அந்தக் குழந்தையைக் கொன்று விடக்கூடும் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கும் நிலையில், அந்தக் குழந்தையை அதன் படுக்கையிலிருந்து தூக்கிக் கொண்டு வந்திருக்கும் இவன், நிச்சயமாக ஒரு மனநிலை மற்றும் நரம்புக் கோளாறு பிடித்தவனாகத் தான் இருக்க வேண்டும். இதோ அந்த அழகான சிறுபெண்ணை அவன் இங்கே கூட்டிக்கொண்டு வந்ததின் மூலம், இங்கே அவள் வாழக்கூடிய வாழ்நாளில் இரண்டு அல்லது மூன்று நாட்களை அவன் இழக்கச்செய்து, இந்த மதவெறியனைச் சந்திப்பதற்காக அழைத்துக் கொண்டு வந்திருக்கிறான். ஓ! இது மிகவும் கேவலமானதாக உள்ளது" என்று கூறினான். அந்தச் சிறியத்தாய், அந்தக் குழந்தையை தூக்கிக் கொண்டிருப்பதை என்னால் காணமுடிகிறது. அவள் அந்தக் குழந்தையை மெதுவாக தட்டிக் கொண்டும், முத்தமிட்டுக் கொண்டும் இருக்கிறாள். அந்தச் சிறு குழந்தை கிட்டத்தட்ட சுயநினைவை இழந்து காணப் பட்டது. அவள் கூறினாள், "அப்பா, நீங்கள் குழந்தையை தூக்கிக்கொள்ளுங்கள், நான் அவரைச் சந்திக்க முயற்சிக்கிறேன்" என்றாள். சிறிய இலை துவாரத்தின் வழியாக இதைப் பார்த்துக் கொண்டிருந்த சகேயு என்ன நடக்கப்போகிறது என்று நான் பார்க்கப்போகிறேன்; என்று கூறினான். 34. சிறிதுநேரத்திற்குபின் அந்த மூளையில் இதோ ஒரு மனிதன் வருகிறார்; நாம் அவரை விரும்பத்தக்க அழகு அவருக்கில்லை. சரிந்த தோள்பட்டையையுடைய சிறிய நபராயிருந்தார். அந்த மூலையிலிருந்து நடந்து வந்த அவர்தான் கலிலேயாவிலிருந்து வந்த தீர்க்கதரிசியாவார். அவரை சகேயு கண்ட அந்த முதல் பார்வை யிலேயே அவனுடைய மனநிலை மாறிவிட்டது. அவன் கூறினான், "அந்த மனிதனிடத்தில் ஏதோ ஒன்று வித்தியாசமானதாக இருக்கிறது". இந்தச் சிறியத்தாய் வேகமாக முன்னே சென்றாள், அந்தப் பெரிய, வலிமையான அப்போஸ்தலன், "பெண்ணே மன்னிக்க வேண்டும்" என்றான். ஆனால் அவளோ, "தயவுசெய்து ஐயா, என் சிறியக் குழந்தை மரணத்தருவாயிலுள்ளது. உங்கள் போதகர் இந்தவழியாக கடந்துபோகும்போது, என் குழந்தையை தொடுவதற்கு மாத்திரம் நீங்கள் எனக்கு அனுமதியளிக்க மாட்டீர்களா?" என்று கூறினாள். நல்லது அம்மா, மன்னிக்கவும், "உங்களைப்போன்ற அதே நிலையில் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்; போதகர் களைப்பாகவும், சோர்ந்துபோயும் இருக்கிறார். அவர் தன்னுடைய உணவிற்காக இப்பொழுது சென்றுகொண்டிருக்கிறார். நான், நீங்கள் அவரைச் சங்கடப்படுத்த விடமாட்டேன்" என்றான். 35. இதோ, அவர் தலைக்குனிந்து அமைதியோடும், அடக்கத்தோடும், நடந்து அங்கே வருகிறார். அவரு டைய சிறிய காதுகள் அந்தத்தாயாரின் அழுகையைக் கேட்டது. அவர் எப்பொழுதும் கேட்கிறவராக இருக்கிறார். அது எவ்வளவு மெல்லிய சத்தமாக இருந்தாலும், அவசியமான உன்னுடைய எல்லா தேவைகளையும் அவர் அறிந்திருக்கிறார். அவருக்குத் தெரியாத படி ஒரு சிறு ஜெபத்தைக்கூட ஏறெடுக்க முடியாது. அவர், "ஓ. யேகோவா தேவனே, உம்முடைய அடிமையின் (Hands Maid] மீது இரக்கமாயிரும் என்று கூறியதை அவர் கேட்டார். என் குழந்தை மரித்துக் கொண்டிருக்கிறது, உம்முடைய அடிமையை அருகில் வரச்செய்யும்". சகேயு கூறினான், "என்ன நடக்கப்போகிறது என்று நான் பார்க்கப்போகிறேன்." அவள் வேகமாக அந்த அப்போஸ்தலனைக் கடந்து போதகரின் கால்களில் விழுந்து, "போதகரே, என்னுடைய சிறுகுழந்தை மிகவும் சுகவீனமாக இருக்கிறது. உம்மை வருத்துவதற்காக என்னை மன்னிக்கவும், நீர் மிகவும் அலுப்பாகவும், களைப்பாகவும், காணப்படுகிறீர்; ஆனால் நீர் உம்முடைய கரத்தை மாத்திரம் என் குழந்தையின் மீது வைத்தால் அதுவே எங்களைத் திருப்திப்படுத்தி விடும். நாங்கள் எங்கள் சபையிலிருந்து இப்பொழுது வெளியேற்றப்பட்டிருப்போம். ஏனென்றால் நாங்கள் எங்கள் குழந்தையை இங்கு கூட்டிக்கொண்டு வந்திருப்பதால், எங்கள் மருத்துவர் கூறினார், நாங்கள் இந்த விதமாக வந்து கலந்து கொண்டால் அவர் இனி ஒருபோதும் எங்களிடம் வரமாட்டேன் என்று. ஆனால், ஓ, போதகரே, நீர் தான் மேசியா என்று நான் விசுவாசிக்கிறேன். நீர் தான் ஜீவிக்கிற தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன். அதனால் தான் நான் என் குழந்தையை இங்கு எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன்". அவர் இதைப் புறக்கணித்து விட்டு போகமுடியுமா? இல்லை, ஐயா. "பேதுருவே. அமைதியாயிரு. குழந்தையை இங்கு கொண்டு வா" என்று சொல்லப்பட்டது. 36. இதோ அனைவரும் நின்று பார்த்துக் கொண்டிருக்க கூட்டத்திலிருந்து பிள்ளையின் தகப்பன் வந்தார். அந்தக் குழந்தை அந்த நகரத்தில் எல்லாராலும் அறியப்பட்டதாயிருந்தது. அவர்கள் அந்தக் குழந்தையை துப்பட்டியால் சுற்றியவண்ணம் கொண்டு வந்தபோது, போதகர் அந்தக் குழந்தை சுற்றப்பட்டிருந்த துப்பட்டியை வெறுமனே தொட்டார். சடுதியாக அந்த சிறு பெண் குழந்தை எழுந்து சந்தோஷமான பெருஞ்சத்தத்தைக் போட்டது. பின்னர் அது தன்னை சுற்றியிருந்த துப்பட்டியை எறிந்துவிட்டு அவளுடைய சிறியக் கயிற்றை எடுத்துக்கொண்டுபோய் குதித்து ஸ்கிப்பிங் [Skipping] விளையாடியது. இதைப்பார்த்துக் கொண்டிருந்த சகேயு, "இது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். தேவனால் மாத்திரமே இதைச் செய்ய முடியும்" என்றான். அவர்கள் கனிவுடன் போதகரைப் பார்த்து தங்கள் தலைகளைத் தாழ்த்தி வணங்கியபோது, அவர் மெதுவாக அந்த தெருவில் நடக்க ஆரம்பித்தார். சகேயுவின் இருதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. இதோ அவர் வருகிறார். இதோ அவர் வருகிறார் என்று எண்ணிக் கொண்டிருந்தான். அவரால் என்னை ஒருபோதும் பார்க்க முடியாது, ஆனால் என்னால் அவரைப் பார்க்கமுடியும். எனவே நான் இந்த இலையை தூக்கிவிட்டு அவரை நோட்டமிடப்போகிறேன். நான் எங்கேயிருக்கிறேன் என்பது அவருக்குத்தெரியாது. "ஆம் நான் ஒரு தொழிலதிபர்; ஆகவே என்னிடம் செய்வதற்கு அவருக்கு ஒன்றுமில்லை; ஆனால் அவர் என்னிடம் எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் நான் இப்பொழுது ஒளிந்து கொண்டிருக்கிறேன். ஆகவே, அவர் இந்த வழியாக கடந்து போகும்போது அவரைப்பார்க்க மட்டும் செய்யப்போகிறேன். 37. ஆகவே, அவன் அந்த இலையை ஒதுக்கிவிட்டு வெளியே பார்க்க ஆரம்பித்தான். இயேசுவானவர் தன் தலையை குனிந்தபடி நடந்து கொண்டிருந்தார். அவர் சடுதியாக நடப்பதை நிறுத்தி, மரத்தின் மேலே நோக்கிப் பார்த்து, "சகேயுவே அந்த மரத்திலிருந்து இறங்கி கீழே வா" என்றார். "நான் உன்னுடன் உன் வீட்டிற்கு வரப் போகிறேன்" என்றார். அவன் அங்கே இருக்கிறான் என்பதை மாத்திரம் தான் அவர் அறிந்திருக்கிறார் என்று சகேயு நினைத்தான். அவர் அவனுடைய பெயரையும் அறிந்திருந்தார். அவனுடைய இருதயத்தையும் அறிவார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். இப்பொழுது சகேயு நம்பினான்; அவர் யார் என்று இப்பொழுது அறிந்துக் கொண்டான்; அவர்தான் மேசியா என்பதை அறிந்துக் கொண்டான். சகேயு மரத்திலிருந்து கீழே இறங்கினான்; அவன், "தேவனே, நான் யாரையாகிலும் கொள்ளையிட்டதுண்டானால், நான் அதைச் சரிப்படுத்தி விடுகிறேன். நான் எதை வேண்டுமானாலும் செய்கிறேன்; இப்பொழுதே எதை வேண்டுமானாலும் செய்கிறேன்" என்றான். நடந்தவைகள் அனைத்தையும் ரெபேக்காள் அறிந்திருந்தாள்; இயேசு அவர் போகிற வழியில் இங்கே வந்து சாப்பிட்டுவிட்டு போகவேண்டுமென்று, அவருக்கு இரவு உணவை ரெபேக்காள் ஏற்கனவே ஆயத்தப்படுத்தி வைத்திருந்தாள்; அவனுடைய வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது. 38. இந்தக் காலை வேளையில் இங்கு அமர்ந்தி ருக்கும் ஒரு கிறிஸ்தவ தொழில் அதிபர் அல்லது மனிதனுக்கு ஒருவேளை அந்த ரெபேக்காள் ஜெபித்திருப்பாள். இந்தக் காலை வேளையில் அவர் இந்த வழியாக கடந்து போகப்போகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று அவர் அறிவார். அவர் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் எந்த அளவு இலைகளைக் கொண்டு உங்களை மறைத்துக்கொண்டாலும், நீங்கள் யார் என்பதை அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் சரியாக எங்கே அமர்ந்திருக்கிறீர்கள் என்பதை அவர் அறிவார். அதைக் குறித்து எல்லாவற்றையும் அவர் அறிவார். நாம் அனைவரும் ஜெபத்திற்காக ஒரு நிமிடம் நம் தலைகளை தாழ்த்தலாம் என்று நான் நினைக்கிறேன்... பிதாவாகிய தேவனே, இந்தக் காலை வேளையில் நீர் இந்த வழியாகக் கடந்து போகப்போவதை நாங்கள் கேட்டறிந்தோம். இந்த மக்களைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது; ஒருவேளை இங்கே ஒரு சகேயு அமர்ந்துகொண்டிருக்கலாம். நான் அதை அறியேன். ஒருவேளை ஒரு அன்புள்ள தாயார் தன்னுடைய அலைந்து திரிந்துகொண்டிருக்கும் மகனுக்காக ஜெபித்திருக்கலாம். ஓ, அவன் உண்மையாகவே ஆசீர்வதிக்கப் பட்டவனாக இருக்கிறான். அவன் ஒரு தொழில் செய்து கொண்டிருக்கிறான்; இப்பொழுது அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது, தாயார் எல்லாவற்றையும் முடித்து, கடந்து போய்விட்டார்; ஆனால் அவளுடைய ஜெபங்கள் இன்னும் உண்மையாக இருந்து கொண்டிருக்கிறது சற்றுநேரத்திற்கு முன்பு தான் அலைந்து திரிந்து கொண்டிருந்த ஒரு பையனின் சாட்சியையும், சுவிசேஷத்தை பிரசங்கித்த அன்புள்ள வயோதிப தகப்பனைக்குறித்தும் நாம் கேட்டோம். ஆகவே, ஓ, நீங்கள் எப்பொழுதும் அருகாமையில் இருக்கிறீர்கள். 39. அந்தப் பையனோ அல்லது பெண்ணோ, எதுவாக இருந்தாலும், தூரமாக அலைந்து திரிந்த அவர்கள் இந்தக் காலை வேளையில் கதவிற்கு அருகில் வந்து, "நல்லது, அவர் இந்த வழியாக கடந்து போகப் போவதாக நான் கேள்விப்பட்டேன்" என்று கூறுகின்ற. தேவனே இந்தக் காலை வேளையில், அந்த இலையை அவர்களை விட்டு தூரமாக அகற்றும். அவர் களை பெயர் சொல்லி அழைத்து, "என் பிள்ளையே, நான் உன்னுடைய தாய் அல்லது மனைவி அல்லது தகப்பனுடைய ஜெபத்திற்கான பதிலுடன் வந்திருக்கிறேன், நான் உன்னை ஏற்றுக்கொள்ள வந்திருக்கிறேன், நான் இந்தக் காலை வேளையில் உன்னுடன் சேர்ந்து வீட்டிற்கு திரும்பச் செல்லப் போகிறேன், நான் இந்த நியூயார்க் உணவகத்தை விட்டுச் செல்லப்போகிறேன், நான் உன்னுடன் சேர்ந்து வீட்டிற்கு போகப்போகிறேன், நான் வெறும் இரவு உணவிற்காக மட்டும் வரப்போவதில்லை; நான், உன்னை, உன்னுடைய தாய் மற்றும் தகப்பனிடத்திற்கு மீண்டும் கொண்டுபோய்ச் சேர்க்கும் வரையில் உன்னுடன் தங்கப்போகிறேன்". ஓ கிறிஸ்து, மனிதனுடைய இருதயத்தை அறிந்தவர். அந்த மரத்தில்தான் சகேயு இருக்கிறான் என்று அறிந் திருந்தவர், நீர் அவன் பெயரை அறிந்திருந்தீர்; நீர் அவனுடைய எண்ணங்களையும் அறிந்திருந்தீர்; இந்தக் காலை வேளையில் எங்களுடைய மனசாட்சியுடனும், எங்கள் இருதயத்துடனும், பேசிக் கொண்டிருக்கிறீர். தேவனே எங்கள் பாவங்களை எங்களுக்கு திறந்து காண்பியும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அந்த சகேயு இப்பொழுது அந்த மரத்திலிருந்து விருப்பத்தோடே நழுவி கீழே வரட்டும்; அந்த உயர்ந்த கிளையில் இருந்து இறங்கி கீழே வந்து சிலுவையின் பாதத்தில் தன்னைத் தாழ்த்தி, "இயேசுவே நான் வருகிறேன்" என்று சொல்லட்டும். 40. நாம் நம் தலைகளைத் தாழ்த்தி இருக்கும் இந்த வேளையில், இத்தகைய யாராவது ஒருவர் இங்கு இருக்கிறீர்களா?. இந்தக் காலை உணவு வேளையில் இது பொருத்தமாக இருக்காது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால்... சகேயு நீ இங்கே இருக்கிறாயா? திருமதி சகேயு நீங்கள் இங்கு இருக்கிறீர்களா? இந்தக் காலையில், இந்தக் காலை உணவிற்குப்பின் அவர் உங்களுடன் உங்கள் வீட்டிற்கு கடந்துவந்து உங்களுடன் என்றென்றும் தங்கியிருக்கவும், ஒருநாள், உங்களை தன்னுடைய அன்பான சிறகுகளில் பத்திரமாக சுமந்து அந்த யோர்தானை கடக்கச்செய்யவும் விரும்புகிறீர்களா? நீங்கள் உங்கள் கரங்களை அவருக்கு நேராய் உயர்த்தி, "இதன் மூலம் நான் கிறிஸ்துவினிடம் வருகிறேன்" என்று சொல்லுங்கள். இப்பொழுது நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள், எல்லா தலைகளும் தாழ்த்தப்படட்டும், பரிசுத்த ஆவியானவரும், நானும் மாத்திரம் இந்தக் கரங்களைப் பார்க்கட்டும். சகேயுவே வா... உயர்த்து... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆகட்டும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகேயுவே, அது சரியானது, வா உன்னை மறைத்துக் கொண்டிருக்கும் அந்த இலையை உயர்த்து; அவர் இங்கே இருக்கிறார். அவர்தான் உன்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகேயுவே வா, நீ எங்கே இருக்கிறாய் என்பதை சரியாக அவர் அறிவார்; நீ அங்கே தான் இருக்கிறாய். 41. ஓ. நீ வளமானவன் ஆனாய், உன்னுடைய தொழில் மிகவும் சிறப்பாக இருந்தது என்பதை நான் அறிவேன். ஆனால், இந்தக் காலை வேளையில் நீ இயேசுவை உன்னுடன் அழைத்துக் கொண்டு போகப் போவதில்லையா? அவர் உன்னுடன் வருவதற்கு நீ அனுமதிக்க மாட்டாயா? அவர் உனக்காகவே வந்திருக்கிறார். நீ யார் என்பதை அவர் உனக்கு இப்பொழுது வெளிப்படுத்துகிறார். நீ அன்றைய தினம் செய்த அந்த நேர்மையற்ற சிறிய தொழில் ஒப்பந்தம், நீ பேசிய அந்த சிறிய கெட்டவார்த்தை, அந்த ஸ்திரி அல்லது அந்த மனிதனிடம் நீ பேசிய உன்னுடைய அறிவாளித் தனத்தைக் காட்டிக்கொள்ளக்கூடிய விஷயம் போன்றவற்றை உன்னை உணரச் செய்கிறார். அவர் அதை அறிந்திருக்கிறார். அவர் உன்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார்; உன்னுடைய மனசாட்சியுடன் பேசிக் கொண்டிருப்பது அவர் தான். உன்னைக் குறித்து நீ வெட்கப்பட வில்லையா? தேவனே, இந்த நாள் முதல், இந்தக் காலை உணவுவேளை முதல், நான் உன்னுடன் ஒரு உடன்படிக்கை செய்கிறேன், இந்த ஜீவியம் ஒரு நாள் முடிவடையும்போது, அக்கரையில் அந்த மிகச் சிறந்த மேஜையில் அமரும்போது, இராஜாதி இராஜா வெளியே வந்து, என்னுடைய கண்களின் கண்ணீரைத் துடைக்கும் போது, அவர், "நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே; கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி" என்று சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன். 42. இதுவரைக் கரங்களை உயர்த்தாதவர்கள், உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? "தேவனே என்னை நினைத் தருளும்; இப்பொழுது உம்மிடத்தில் என் கைகளை உயர்த்துகிறேன் என்று சொல்லுங்கள். இப்பொழுது, நீர் என்னுடைய தவறுகளையும், என்னுடைய பாவங் களையும் எனக்கு வெளிப்படுத்துகிறீர். நீர் என் இருதயத்தை அறிந்திருக்கிறீர். இந்தக் காலை வேளையில், இந்த கூட்டத்திற்கு பின், நீர் என்னுடன் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னுடன் ஜீவிக்க வேண்டுமென்றும், என்னுடைய தொழில் அலுவலகத்திற்கு வரவேண்டுமென்றும் விரும்புகிறேன். நான் திரும்பிப் போய், என்னுடைய எல்லா வேலையாட்களிடம், நான் ஒரு மாற்றம் அடைந்த மனிதன் என்றும், நான் ஒருவரை காலை உணவு வேளையில் சந்தித்தேன் என்றும் சொல்ல விரும்புகிறேன்." "என்ன காலை உணவு?" "ஓ, அது கிறிஸ்தவ வர்த்தகப் புருஷர்கள் (Christian Businessmen] கொண்டிருந்த ஒரு கூட்டம். நான் ஒரு மேஜையில் அமர்ந்திருந்தேன். திடீரென ஏதோ ஒன்று என் இருதயத்துடன் பேசியது; என்னுடைய பாவங்கள் எனக்கு முன்பாக ஒரு மலையைப் போல் நின்றது. நான் தாழ்ந்த குரலில் இரகசியமாக "தேவனே என்னை மன்னியும்" என்றேன். அவையாவும் மறைந்து அகன்றன, சமாதானம் என்னுடைய பாரப்பட்ட ஆத்துமாவிற்குள் வந்தது. இன்றிரவு நான் இளைப்பாருவேன் என்று நம்புகிறேன். என்னுடைய சமாதானம் ஒரு நதியைப் போல் இருக்கிறது. என்னுடைய வேலையாட்களாகிய நீங்கள், இது முதல் நான் ஒரு வித்தியாசமான மனிதனாக இருக்கப்போவதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்". 43. வீட்டிற்குப்போய் உங்கள் மனைவியைப்பார்த்து, "மனைவியே உன்னுடைய ஜெபத்திற்குப் பதிலளிக்கப் பட்டுள்ளது; இன்று காலை நான் இயேசுவை சந்தித்தேன். அவர் அந்தவழியாக கடந்துச்செல்லப் போகிறார் என்பதை நான் கேட்டேன். அவர் அந்த வழியாக வருவார் என்று நான் நினைத்துப் பார்க்கவேயில்லை. ஆனால், நான் அங்கு அமர்ந்து கொண்டிருந்தேன். சடுதியாக ஏதோ ஒன்று என்னைத்தாக்கியது. அது அவராக மாத்திரம் தான் இருக்க முடியும். நான் ஒரு கடின-இருதயமுடையவன். நான் ஒரு அலட்சியமானவன். ஓ, நான் ஒரு சபையின் உறுப்பினன். நிச்சயமாக, ஆனால் ஏதோ ஒன்று சம்பவித்தது. அவர் என்னுடன் வீட்டிற்கு வந்திருக்கிறார். மனைவியே இதுமுதல் நான் உன்னை வித்தியாசமாக நடத்தப் போகிறேன். நான் அப்படிச் செய்யாவிட்டால், நீ என்னை கவனித்துப்பார். பிள்ளைகளிடத்திலும் நான் வித்தியாசமானவனாகத் தான் நடக்கப் போகிறேன். இனிமேல் நான் எப்பொழுதுமே குடிக்கமாட்டேன், ஏனென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், நான் என் வாழ்வில் புதிய பக்கங்களை திருப்ப முயற்சிக்கிறேன். ஆனால் எனக்கு ஏதோ ஒன்று நிகழ்ந்தது. இப்பொழுது நான் வித்தியாசமானவனாக இருக்கப் போகிறேன். "ஓ ஓ. நான்-நான் வெளித்தோற்றத்திற்கு ஒரு கிறிஸ்தவன்; அப்படியாக தொடர்ந்து கொண்டிருந்தேன். அசுத்தமான வார்த்தைகளை உபயோகித்தேன். உலகமார்க்கமான காரியங்களை நோக்கிப் போனேன்; திரைப்படங்கள், பயாஸ்கோப் காட்சிகள் போன்றவற்றிற்கு சென்றேன். கீழ்த்தரமான நிகழ்ச்சிகளை கண்டு களித்தேன். அசுத்தமான நகைச்சு வைகளைச் செய்து, என்னுடைய தொழில் போட்டியாளர்கள் மற்றும் மற்றவர்களுடனும் சேர்ந்து மதுவருந்தி இருக்கிறேன்; ஆனால், நான் இவைகளை மீண்டும் இனி ஒருபோதும் செய்ய மாட்டேன். ஏதோ ஒன்று நிகழ்ந்தது; இயேசு என்னுடன் என் வீட்டிற்கு வந்திருக்கிறார்". 44. நீங்கள் இதைச்செய்ய விரும்பவில்லையா? வேறுயாராகிலும் இருக்கிறீர்களா? அங்கே நான்கு அல்லது ஐந்து பேர் தங்கள் கைகளை உயர்த்தினார்கள், உங்களில் வேறுயாராவது அதைச் சொல்லுவீர்களா? "கர்த்தருடைய கிருபையினால், இப்பொழுது நான் இயேசுவை என்னுடன் என் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போகிறேன்; நான் தான் சகேயு. ஆம், ஓ, சகேயு போல நானும் ஒரு சபையைச் சேர்ந்தவன். சகேயு போல நானும் மிகச்சரியாக இருக்கிறேன் என்று எண்ணினேன். சகேயு, தான் சரியாக இருப்பதாக எண்ணினான், ஆனால் அவன் இயேசுவின் முன்னிலையில் வருமளவும் தவறானவனாகத்தான் இருந்தான். உன்னுடன் பேசிக் கொண்டிருப்பது அவர்தான்; மரத்திலிருந்து இறங்கி கீழே வா. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரியே; அது நல்லது. இப்பொழுது அவர் உங்களுடன் பேசினார் என்று நீங்கள் உறுதியாக அறிந்திருக்கிறீர்களா? ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தாவே,"என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்" என்று கர்த்தர் சொல்லியிருக்கிறீர். தேவனே, இந்தக் காலை வேளையில் நான்கு அல்லது ஐந்து நபர்களின் இதயக் கதவை நீர் தட்டினீர்; நீர் அவர்கள் இருதயத்தை அறிந்திருக்கிறீர்; நீர் அவர் களுடன் பேசினீர்; அவர்களை அறிந்திருக்கிறீர்; தேவனே, இந்த மணிநேரம் முதல், தங்கள் கரங்களை உயர்த்தின இந்தப் புருஷர்கள், தெய்வீகமாக வாழட்டும், அவர்கள் தங்கள் வீட்டிற்குப்போகட்டும்... தாங்கள் தொழில் செய்யும் இடத்திற்கு கடந்துச் செல்லட்டும். தங்கள் கரங்களை உயர்த்தின இந்த ஸ்திரீகள், மாற்றப்பட்ட நபர்களாக திரும்பிச் செல்லட்டும்; அவர்கள் வசிக்கும் நகரத்தில் இவர்களுடைய தாக்கம் பெரிதாக இருக்கட்டும். நீர் அவர்களை ஆசீர்வதித்து, அவர்கள் செய்யும் எல்லாக் காரியங்களையும் வர்த்திக்கப் பண்ணும். அவர்கள் ஏதாவது தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள் என்றால், அந்தத் தொழிலானது வளர்ந்து விருத்தியடைய அருள்புரியும். இந்தக் காலை வேளையில் அவர்கள் தங்களுக்கு என்று ஒரு புதிய பங்குதாரரைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்; அவர் இராஜாதி இராஜாவானவர். 45. இவர்கள் ஃப்ரூட் ஜார் நிறுவனத்தின் திரு.பால் அவர்களையும், பாலாடைக்கட்டி (Cheese) நிறுவனத்தின் திரு.கிராஃப்ட் அவர்களையும் நினைவுகூறட்டும். எப்படி அவர் தன்னுடைய பாலாடைக்கட்டி வியாபாரத்தை தொடர்ந்து நடத்த முடியாதவராயிருந்தார். ஒரு நாள் ஒரு சத்தம் அவருடன் பேசி, "என்னை உன்னுடைய தொழில் பங்குதாரராக சேர்த்துக்கொள்" என்றது..? கோல்கேட் நிறுவன தொழிலதிபர் உட்பட பலர். அவர்கள் இயேசுவை தங்கள் பங்குதாரராக ஆக்கிக் கொண்ட போது காரியங்கள் மாறின. தேவனே இவர்களுக்கும் அப்படியே நடக்கட்டும். நாங்கள் உம்மை நேசிக்கிறோம். இந்தக் காலை உணவிற்காக உமக்கு நன்றி. இந்தக் கூடுகைக்காக உமக்கு நன்றி. நாங்கள் ஆரம்பத்தில் உட்கொண்ட இயற்கையான உணவிற்காக நன்றி. எங்களை தேவனுக்குள் இன்னும் சிறந்த பிள்ளை களாகவும், சுவிசேஷத்தின் வல்லவர்களாகவும் மற்றும் சரியானவைகளைச் செய்வதற்கான மனஉறுதியளிக்கக் கூடிய இந்த ஆவிக்குரிய ஆகாரத்திற்காகவும் இப்பொழுது நன்றி செலுத்துகிறோம். நாங்கள் உம்மை அந்த மகத்தான விருந்தில் சந்திக்கும் அந்த வேளை வரையும் தேவனே எங்களைக் காத்து, வழிநடத்தும்; எங்கள் கரத்தைப் பிடித்துக்கொள்ளும்; இருளினூடாக நாங்கள் நடக்கையில் எங்களோடு வாரும். சேறான நிலத்திலும், மணல் படுக்கைகளிலும் (Shifting Sand), மேலும் நாங்கள் முடிவாக உம்மை அந்த வீட்டில் சந்திக்கும் வரையும் எங்களோடு இரும். இயேசுவின் நாமத்தில் இதைக்கேட்கிறோம். ஆமென். இரட்சகா, இரட்சகா, என்னுடைய தாழ்மையான கூக்குரலுக்குச் செவிகொடும், மற்றவர்கள் உம்மை கூப்பிட்டுக்கொண்டிருக்கையில், என்னைக்கடந்து சென்றுவிடாதேயும். நாம் ஒருவரோடு ஒருவர் கைகளைக் கொடுத்து, "கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக" என்று சொல்லுவோம். உங்களுக்கு அடுத்து உட்கார்ந்திருக்கும் அந்த ஒருவரின் பக்கமாகத் திரும்பி, "கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக" என்று கூறுங்கள். மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிட்டேரியன், பெந்தெகொஸ்தே... என்னுடைய தாழ்மையான கூக்குரலுக்குச் செவிக்கொடும்; மற்றவர்கள் உம்மை கூப்பிட்டுக்கொண்டிருக்கையில், ஓ, என்னைக்கடந்து சென்றுவிடாதேயும். நீங்கள் அந்தப்பழைய நாகரீகப் பாடல்களை விரும்புவீர்களா? அது உங்களைக் கழுவிச் சுத்திகரிக்கும். நான்... இந்த யூபிலி பாடல்களுக்கு [Jubilee Songs] எதிராக எதையும் கொண்டிருக்கவில்லை. அவைகள் நல்லது தான். ஆனால் எனக்கு, பழைய நாகரீகப் பாடல்கள் தான் பிடிக்கும். நானும் அத்தகையப் பழைய நாகரீக கிறிஸ்தவர்களில் ஒருவன். மக்களைத் தன்னிடமாக ஈர்க்கும் அத்தகைய எளிமையான, மென்மையான பாடல்களை நான் விரும்புகிறேன். வயது முதிர்ந்த, குருடான ஃபானி க்ரோஸ்பி அந்தப் பாடலை எழுதினாள். "நீங்கள் ஃபானி க்ரோஸ்பியைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?" அவள் இதை எழுதினாள். ஓ சாந்தமான இரட்சகரே, என்னைக்கடந்து செல்லாதேயும், என்னுடைய தாழ்மையான கூக்குரலுக்குச் செவிகொடும்; மற்றவர்கள் உம்மைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கையில், என்னைக்கடந்து சென்றுவிடாதேயும், நீரே என்னுடைய ஆறுதல் எல்லாவற்றிற்குமான ஓடை, என் ஜீவனைப்பார்க்கிலும் மேலானவர். பூலோகத்தில் உம்மைத்தவிர வேறு யார் எனக்கு உண்டு? அல்லது பரலோகத்திலும் உம்மையல்லாமல் யார் எனக்கு உண்டு?" 46. அவள் தன்னுடைய பரிசை பெற்றுக்கொண்டாள். அவள் ஒரு கவிஞனாக இருக்கையில்... ஒரு கூட்ட புருஷர்கள் அவளிடம் வந்து, அவள் உலகப்பிரகாரமான பாடல்களை எழுதவேண்டும் என்று கூறினர். அவர்கள், "திருமதி.க்ரோஸ்பி, நீங்கள் ஒரு நல்ல எதிர்காலத்தை இழக்கின்றீர்கள்; நீங்கள் காதல் பாடல்களை எழுத வேண்டும்" என்று கூறினர். அவள், "தேவன் அவரைக்குறித்த பாடல்களை எழுதத்தான் என்னை அழைத்திருக்கிறார்" என்று கூறினாள். அவன் கூறினான், "ஓ, அந்தப் பரலோகம் சார்ந்த காரியமா...". நாத்தீகரான அந்த இருவரும், "அப்படியான ஒரு காரியமே இல்லை", "நீ பரலோகத் திற்குப் போனால்... நீ போக முடிந்தால்... பரலோகம் என்று ஒரு இடம் இருந்து நீ அங்கே சென்றால்..." "நீ ஒரு கண்பார்வையற்றவள்" "நீ அவரை ஒருபோதும் காணமுடியாது, அவர்தான் கிறிஸ்து என்று எப்படி அறிவாய்?" உன்னால் அவரைக் கண்டறிய முடியாது, ஏனென்றால் "நீ ஒரு குருடி" என்று கூறினர். அவள் கூறினாள், "நான் குருடியாய் இருந்தாலும் நான் அவரை அறிவேன், நான் அவரை அறிவேன்."பின்னர், அவர்கள் அந்தக் கதவை அடித்து சாத்திவிட்டு வெளியே போனபின், அவள் அந்த அறையின் ஊடாக கீழே தன் கைகளை உயர்த்தியபடிச் சென்று, இந்தப் பாடலை அவள் எழுதினாள். நான் அவரை அறிந்துக்கொள்வேன், நான் அவரை அறிந்துக்கொள்வேன், மீட்கப்பட்டவர்களோடு அவருடைய பக்கத்தில் நான் நின்று, நான் அவரை அறிந்துக்கொள்வேன், நான் அவரை அறிந்துக்கொள்வேன், அவருடைய கரங்களிலுள்ள ஆணிகளின் தழும்புகளைக்கொண்டு. 47. அத்தகைய விமர்சனங்களை கேட்கும் நேரங்களில், நம்மை சோதிப்பதற்கான பாரம் நம்மீது வருகிறது. உங்கள் தொழிலில் அல்லது மற்ற எதிலும் ஏற்படும் அத்தகைய சூழ்நிலை பொன்னைக்காட்டிலும் மிகவும் விலையுயர்ந்தது. அவைகள் சோதனைக்கான நேரம். வேறொரு நாளில் அந்தக் காலை உணவு வேளையில் நான் பேசியது போல், சோதனைகள் நம்மை நிரூபிப்பதற்காகத்தான். அவள் கூறினாள், "நான் அவரை அறிவேன், நான் அவர் கரங்களை எடுத்து, அதிலுள்ள ஆணிகளின் தழும்புகளைத் தடவிப்பார்த்து அவரை அறிந்துக்கொள்வேன்". "நான் குருடியாக இருந்தாலும், நான் அவரை அறிவேன்" என்றாள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, இங்குள்ள வர்த்தகப் புருஷர்களுக்கு முழுசுவிசேஷ வர்த்தகப் புருஷர்களுக்கு, நான் ஒன்றைக்கூற விரும்புகிறேன். சகேயுக்கு என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? நான் அதை உங்களுக்குச் சொல்லுகிறேன். அவன் எரிகோவிலுள்ள முழுசுவிசேஷ வர்த்தகப் புருஷர்கள் சங்கத்தின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக மாறிவிட்டான். 2 HE WAS TO PASS THAT WAY அவர் அந்த வழியாக கடந்து போக வேண்டியதாயிருந்தது 2